அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த மாணவருக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சரண்.
இவரது தந்தை ஜெயந்த் சேகர் திருப்பதியில் எலெக்ட்ரீஷியனாகப் பணிபுரிந்து வருகிறார்.
வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் படித்த இந்த மாணவர் பிளஸ் 2 தேர்வில் 1157 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். நீட் தேர்வில் 416 மதிப்பெண் பெற்று தமிழக மருத்துவ தரவரிசைப் பட்டியலில் 972-ஆவது இடம் பெற்றார். இவருக்கு மருத்துவக் கலந்தாய்வில் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.இது தொடர்பாக மாணவர் சரண் கூறியது: நான் படித்த பள்ளியிலேயே நீட் தேர்வுக்கென்று தனியாகப் பயிற்சி அளித்தனர். ரூ.18,000 கட்டணம் செலுத்திப் படித்தேன். கட்டணத்தைச் செலுத்த சிரமப்பட்டாலும், அந்தப் பயிற்சி மிகவும் பயனளித்தது. சுமார் ஐந்தரை மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த ஆண்டு ஜனவரி, ஏப்ரல் மாதங்களில் நீட் தேர்வுக்கென்று பிரத்யேகமாகத் தயாரானேன். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்குத் தயாரானேன். அதனால் இரண்டு தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் பெற முடிந்தது. சென்னையில் உள்ள ஏதேனும் கல்லூரி அல்லது செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன்.ஆனால், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. எனினும், மகிழ்ச்சியாக உள்ளது என்றார் அவர்.

No comments:
Post a Comment