www.asiriyar.net

Wednesday, 4 July 2018

பி.இ., 2ம் ஆண்டு சேர்க்கை 80 ஆயிரம் காலி இடங்கள்

பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடிச் சேர்க்கையில், சிவில் பிரிவில், 13 ஆயிரத்து 874 இடங்கள் உட்பட, மொத்தம், 80 ஆயிரம் காலியிடங்கள் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

பாலிடெக்னிக், பி.எஸ்சி., முடித்தவர்கள், பி.இ., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்ந்து படிப்பதற்காக கலந்தாய்வு காரைக்குடி அழகப்பா இன்ஜி., கல்லுாரியில்,கடந்த 30ல் துவங்கியது. பொதுப்பிரிவான சிவிலுக்கு நடந்து முடிந்துள்ளது. தற்போது மெக்கானிக்கல் பிரிவுக்கு நடந்து வருகிறது.தமிழகம் முழுவதும் உள்ள, 500 இன்ஜி., கல்லுாரிகளிலிருந்து, 20 சதவீத அடிப்படையில் சிவிலுக்கு, 15721 இடங்கள் ஒதுக்கப்பட்டன. 2150 பேர் விண்ணப்பித்ததில், 1847 பேர் மட்டுமே பங்கேற்று சேர்க்கை ஆணை பெற்றனர். 13 ஆயிரத்து 874 இடங்கள் காலியாக உள்ளன.மெக்கானிக்கலை பொருத்தவரை, 21ஆயிரத்து 670 இடங்களுக்கு, 4800 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

 எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் பிரிவுக்கு, 50 ஆயிரத்து 989 இடங்களுக்கு, 4050 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். நடப்பாண்டில் ஒதுக்கப்பட்ட, 90 ஆயிரம் இடங்களில், 10ஆயிரம் இடங்களே நிரம்பும் நிலை இருப்பதால், 80 ஆயிரம்காலி இடங்களுடன் கல்லுாரிகள் செயல்படும் நிலை உள்ளது.

No comments:

Post a Comment