www.asiriyar.net

Tuesday, 3 July 2018

கால்நடை மருத்துவ படிப்பு : இன்று தரவரிசை பட்டியல்

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல், இன்று வெளியிடப்படுகிறது.தமிழகத்தில், கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு, உணவு தொழில்நுட்பம் போன்ற படிப்புகளில், 360 இடங்கள் உள்ளன.



 அதேபோல, கோழியின உற்பத்தி தொழில்நுட்பம், பால்வள தொழில்நுட்பம் போன்ற, பி.டெக்., படிப்புகளுக்கு, 460 இடங்கள் உள்ளன. இந்த படிப்புகளில் சேர, 12 ஆயிரத்து, 217 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

இவர்களுக்கான தரவரிசை பட்டியலை, சென்னை, வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லுாரியில், இன்று காலை, வெளியிடப்படுகிறது. தமிழக கால்நடை மருத்துவ பல்கலை துணைவேந்தர், பாலச்சந்திரன் வெளியிட உள்ளார்.

No comments:

Post a Comment