www.asiriyar.net

Tuesday 3 July 2018

BE - கூடுதல் கட்டணம் புகாரை விசாரிக்க கமிட்டி

அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என, கல்லுாரிகளுக்கான கட்டண நிர்ணய கமிட்டி நிர்ணயித்துள்ளது.


அதிகபட்சமாக, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான ஆண்டு கட்டணமாக, 55 ஆயிரம் ரூபாய்; நிர்வாக இடங்களுக்கு, 87 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.ஆனால், சரியான உள் கட்டமைப்பு வசதிகள் இல்லாத கல்லுாரிகளும், கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றன என, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,க்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, கல்லுாரிகளுக்கு அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லுாரிகள் மீது விசாரணை நடத்துவது குறித்து, கமிட்டி ஒன்றை, தமிழக அரசு அமைத்துள்ளது; அண்ணா பல்கலை இயற்பியல் துறை பேராசிரியர், செல்லத்துரை, கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த கமிட்டி, புகார்களை விசாரித்து, உயர் கல்வி மற்றும் கல்லுாரி கட்டண நிர்ணய கமிட்டிக்கு அறிக்கை அனுப்பும். கூடுதல் கட்டணம் தொடர்பான புகார்களை, மாணவர்களும், பெற்றோரும், tncapitation@gmail.com என்ற, இ - மெயிலுக்கு அனுப்பலாம் என, அறிவுறுத்தப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment