www.asiriyar.net

Friday 13 July 2018

அனைத்து வகை பள்ளிகளிலும், ஜூலை 15 - கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட உத்தரவு!

தமிழக பள்ளிகளில், 15ம் தேதி கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட, உத்தரவிடப்பட்டுள்ளது.



தமிழக முன்னாள் முதல்வர், மறைந்த காமராஜரின் பிறந்த நாள், வரும், 15ம் தேதி, அரசின் சார்பில் கொண்டாப்படுகிறது.
இந்த நாளை, கல்வி வளர்ச்சி நாளாக கடைபிடிக்க, தமிழக அரசுஉத்தர விட்டுள்ளது.

  இதன்படி, அனைத்து வகை பள்ளிகளிலும், அன்று, காமராஜரின் வரலாறு, அவரது திட்டங்கள், சாதனைகள், கல்விக்கு அவர் ஆற்றிய பணிகள் குறித்து, மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.பள்ளிகளில், சிறப்பு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தி,காமராஜர் பெயரில் பரிசு வழங்கவும், உத்தரவிடப்பட்டு உள்ளது.

2 comments: