நிகழ்வுகள்
1871 – லாப்ரடோரில் சூறாவளி தாக்கியதில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
1881 – ஜெனட் என்ற அமெரிக்கக் கப்பல் ஆர்க்டிக் பெருங்கடலில் மூழ்கியது.
1886 – பிரித்தானியக் கொலம்பியாவின் வான்கூவர் நகரத்தின் பெரும் பகுதி தீயினால் சேதமடைந்தது.
1886 – பாவாரியாப் பேரரசன் இரண்டாம் லுட்விக் மியூனிக்கின் ஸ்டார்ன்பேர்க் ஆற்றில் இறந்துகிடக்கக் காணப்பட்டான்.
1917 – முதலாம் உலகப் போர்: லண்டன் நகர் மீது ஜெர்மனியப் போர் விமானங்கள் தாக்கியதில் 46 குழந்தைகள் உட்பட 162 பேர் கொல்லப்பட்டனர்.
1925 – சார்ல்ஸ் ஜென்கின்ஸ் படங்களையும் ஒலியையும் ஒரே நேரத்தில் அனுப்பும் முறையை முதன்முறையாக வெற்றிகரமாகப் பரிசோதித்தார். 10-நிமிட அசையும் படத்தை 5 மைல்கள் தூரத்திற்கு அனுப்பினார்.
1934 – ஹிட்லரும் முசோலினியும் வெனிசில் சந்தித்தனர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனி பறக்கும் குண்டுகளை இங்கிலாந்து மீது வீசியது. மொத்தம் 11 குண்டுகளில் 4 குண்டுகள் இலக்குகளைத் தாக்கின.
1948 – ஈழத்தின் முதல் எழுத்தாளர் சங்கமான தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.
1948 – மலாயா தொழிற்சங்கங்களின் சம்மேளனம் மலேசியாவில் தடை செய்யப்பட்டது.
1952 – சோவியத்தின் மிக்-15 போர் விமானம் சுவீடனின் டிசி-3 ரக விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது.
1955 – சோவியத் ஒன்றியத்தில் முதலாவது வைரச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.
1978 – இஸ்ரேலின் பாதுகாப்புப் படையினர் லெபனானை விட்டு விலகினர்.
1981 – லண்டனில் இடம்பெற்ற அணிவகுப்பு நிகழ்வு ஒன்றில் சிறுவன் ஒருவன் இரண்டாம் எலிசபெத் மகாராணியை நோக்கி வெற்றுத் துப்பாக்கிக் குண்டுகளைத் தீர்த்தான்.
1983 – பயனியர் 10 சூரியக் குடும்பத்தைத் தாண்டிய முதலாவது விண்கப்பல் ஆனது.
2006 – நியூ ஹரைசன்ஸ் தனது பயண வழியில் 101,867 கிமீ தூரத்தில் 132524 APL என்ற சிறுகோளை சந்தித்து அதன் படத்தைப் பூமிக்கு அனுப்பியது.
2007 – திருகோணமலையில் மேர்சி கோப்ஸ் என்னும் பன்னாட்டுத் தன்னார்வல அமைப்பின் பிலிப்பீன்ஸ் பணியாளர் ஒருவர் இலங்கைக் கடற்படையினரால் சுடப்பட்டார்.
பிறப்புகள்
1831 – ஜேம்சு மக்சுவெல், இசுக்கொட்டிய இயற்பியலாளர் (இ. 1879)
1865] – டபிள்யூ. பி. யீட்சு, நோபல் பரிசு பெற்ற ஐரிய எழுத்தாளர் (இ. 1939)
1870 – ஜூல்ஸ் போர்டெட், நோபல் பரிசு பெற்ற பெல்ஜிய மருத்துவர் (இ. 1961)
1905 – ஜேம்ஸ் இரத்தினம், இலங்கை வரலாற்றாளர் (இ. 1988)
1909 – நம்பூதிரிபாது, 1வது கேரள முதலமைச்சர் (இ. 1998)
1928 – ஜான் நாசு, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (இ. 2015)
1933 – யாழ்வாணன், ஈழத்து எழுத்தாளர் (இ. 1996)
1935 – சமாக் சுந்தரவேஜ், தாய்லாந்தின் 25வது பிரதமர் (இ. 2009)
1944 – பான் கி மூன், 8வது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர்
1946 – பவுல் மோட்ரிச், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிரிவேதியியலாளர்
1959 – கிளாசு யோகன்னிசு, உருமேனியாவின் 5வது அரசுத்தலைவர்
1966 – கிரிகோரி பெரல்மான், உருசியக் கணிதவியலாளர்
1981 – கிறிஸ் எவன்ஸ், அமெரிக்க நடிகர்
1987 – ஜி. வி. பிரகாஷ் குமார், தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்
இறப்புகள்
1231 – பதுவை நகர அந்தோனியார், போர்த்துக்கீசப் புனிதர் (பி. 1195)
1931 – கிடசாடோ சிபாசாபுரோ, சப்பானிய மருத்துவர் (பி. 1851)
1969 – பிரகலாத் கேசவ் அத்ரே, இந்திய ஊடகவியலாளர், இயக்குநர் (பி. 1898)
2012 – மெஹ்தி அசன், பாக்கித்தானிய கசல் பாடகர் (பி. 1927)
சிறப்பு நாள்
கண்டுபிடிப்பாளர் நாள் (அங்கேரி)
மாவீரர் நாள் (ஈராக்கிய குர்திஸ்தான்)
Prepare your best for jobs and competitive exams, but don't miss out on your entertainment! Because as they say "all work and no play, makes Jack a dull boy". Grab the best entertainment deals at Bookmyshow and give your life little cherishable moments.
ReplyDelete
ReplyDeleteOld Navy Black Friday Sale is the right time to restock your clothes, as you can get amazing discounts and can save up to 75% on clothing.
checkout latest Swiggy Coupon codes
ReplyDeleteSwiggy discount coupons