www.asiriyar.net

Thursday 1 March 2018

தொலைநிலை கல்விக்கு புதிய விதிகள் : பெரியார் பல்கலை துணைவேந்தர் தகவல்

''பெரியார் பல்கலை தொலைநிலைக்கல்விக்கு, புதிய விதிகளை உருவாக்கும் பணி நடந்து வருகிறது,'' என, துணைவேந்தர் குழந்தைவேல் தெரிவித்துள்ளார்.

பெரியார்பல்கலை தொலைநிலைக்கல்வி நிறுவனத்தின், படிப்பு மைய ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது.இதில், மாணவர் சேர்க்கையை ஆன்லைன் மூலம், நிர்வகிக்கும் புதிய நடைமுறையை, துணைவேந்தர் குழந்தைவேல் அறிமுகப்படுத்தினார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது: பெரியார் பல்கலை படிப்பு மையத்தில் ஆன் லைன் மூலம், மாணவர் சேர்க்கையை முறைப்படுத்தி, எளிமைப்படுத்தும் வகையில், புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

கல்விக்கட்டணம், தேர்வுக்கட்டணம் உள்ளிட்ட, அனைத்து கட்டணங்களையும், ஆன்லைன் மூலமே செலுத்தலாம். படிப்படியாக, தொலைநிலைக்கல்வியின் அனைத்து பரிவர்த்தனைகளும், முழுமையாக, ஆன்லைன் நிர்வாகத்தில் கொண்டு வரப்படும்.

பல்கலை மானியக்குழு விதிகளை முழுமையாக அமல்படுத்தும் வகையில், தொலைநிலைக்கல்விக்கு புதிய விதிகளை உருவாக்கும் பணி நடந்து வருகிறது.இவை விரைவில் அமல்படுத்தப்படும். மாணவர் சேர்க்கை முதல், பட்டம் பெறும் வரை, உரிய விதிகளின் படி, வெளிப்படையான நிர்வாகம் உறுதி செய்யப்படும். இவ்வாறுஅவர் பேசினார்.

No comments:

Post a Comment