தமிழக பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்றுதுவங்குகிறது; ஏப்., 5ல் முடிகிறது. தேர்வு முடிவுகள்,மே 16ல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்வின் போது சோதனையிட, 4,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மாணவியரை, பறக்கும் படையில் உள்ள பெண் கண்காணிப்பாளர்கள் தான் சோதனையிட வேண்டும்.தேவையின்றி மாணவர்களை சந்தேகப்பட்டு, அவர்கள் தேர்வு எழுதும் நேரத்தை வீணாக்கி விடக் கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. காப்பி அடித்தல், ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகளை கண்டறிந்தால், உடனே, அவர்களிடம் வாக்குமூலம் வாங்கி, உரிய ஆவணங்களுடன் தேர்வு மைய கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment