www.asiriyar.net

Sunday 4 March 2018

வேலூர் மாவட்டம் பள்ளி ஆய்வு மாநில திட்ட இயக்குநர் அவர்கள் ஆய்வு நேற்று 02/03/2018 முடிந்தது. தகவல் சிறு தொகுப்பு

💥 *ஆசிரியர் பயிற்றுநர்கள் மட்டுமல்லாமல் மாவட்ட கல்வி அலுவலர்கள் DEO's DI, ADPC SSA & RMSA ஆகியோர் முழுமையாக பார்வையிட்டு நிறை குறைகளை தெளிவாக எழுதலாம் அல்லது ஏற்கனவே ஆசிரியர் பயிற்றுநர்கள் பார்வையிட்ட குறிப்புகளை மீளாய்வு பள்ளியில் சென்று நேரடியாக ஆய்வு செய்து அறிக்கை குறிப்பிடல் வேண்டும்.*


💥 *பார்வையின் போது ALM(6-8) கற்றல்,SALM(5) உரிய படிநிலைகளை கற்றல் விளைவுகள் (Learning Outcomes) உடன் பின்பற்றி பாடம் நடத்திட வேண்டும். TLM கற்றல் உபகரணங்களை பயன்படுத்தி கற்பிக்க வேண்டும்.*

💥 *ஆசிரியர் பயிற்றுநரின் பார்வையில் கூறப்பட்ட நிறைகுறைகளை தலைமை, உரிய வகுப்பு, பொறுப்பு ஆசிரியர்கள் அந்தக்குறைகளை இத்தனை நாட்களுக்குள் நிவர்த்தி செய்கிறேன் என அந்த நோட்டிலே எழுதி கையொப்பமிட வேண்டும்.*

💥 *அடுத்த ஆண்டு ஜீன் மாதம் மூன்றாவது வாரத்தில் இதே மாதிரி தான் ஆய்வு எந்தப்பள்ளியை வேண்டுமானாலும் பார்வையிடலாம். பார்வையிட்ட பள்ளியும் வரலாம். பார்வையிடாத பள்ளியும் வரலாம்.*

💥 *குறைதீர் நடவடிக்கை மேற்கண்ட C, D மாணவர்களுக்கு எடுக்கப்பட்ட remedies action,Action plan Note, individual student records மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விவரங்கள் அதன் மூலம் மேற்கொண்ட நடவடிக்கைகள், லெசன் பிளான், வொர்க் டன் ஆகியவை இருக்க வேண்டும்.*

💥 *அனைத்து மாணவர்களுக்கும் குறிப்பாக C&D மாணவர்களுக்கு class Work notebook, Homework notebook 2 வரி, 4வரி தினசரி பயிற்சி தருதல் ,கட்டுரை( தமிழ், ஆங்கிலம்) மாதம் ஒன்று வீதம் எழுதியதை அவ்வப்போதே திருத்தம் செய்து தேதியுடன் கையொப்பமிட்டிருக்க வேண்டும். உதாரணமாக அவர்கள் C&D 5 மாணவர்களின் நோட்டுகளை எடுத்து வந்து அதில் மாணவர்கள் தொடர்ந்து எழுதுகிறார்களா என்றும் எப்பொழுதிலிருந்து எழுதுகிறார்கள், வருட தொடக்கத்திலா முடிவிலா என ஆய்வு செய்கிறார்கள்.*
💥 *தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் முதலானவற்றை மாணவர்களின் உச்சரிப்பு பார்வையிடப்படுகிறது.*

💥 *கணிதம், அறிவியல் உபகரணப்பெட்டியை வைத்து கற்றல் கற்பித்தல் பணி நடைபெறுகிறதா என சோதிக்கப்படுகிறது.*

*கற்பித்தல் நடைபெறுகிற Tamil, English dictionary கட்டாயம் உரிய இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.*

📌📌📌📌📌📌📌

No comments:

Post a Comment