www.asiriyar.net

Monday, 25 December 2017

திருவண்ணாமலைமாவட்ட ஆட்சியர் அரசு பள்ளி மாணவிக்கு அளித்த பாராட்டு

நேற்று செய்யார் சிப்காட் லோட்டஸ் நிறுவனம் சார்பில் கல்வி துறைக்கு பல நலதிட்டங்கள் மாவட்ட ஆட்சியர் திரு.கந்தசாமி அவர்களது தலைமையில் வழங்கப்பட்டது.

 
> மாவட்டத்தில் சிறந்த கல்வி பணி ஆற்றிவரும் முதன்மை கல்வி அலுவலர் திரு.ஜெயக்குமார்  அவர்களும் கலந்து கொண்டார்.


விழாவில் செய்யார் அரசு மகளிர் மேனிலைப் பள்ளி  11ஆம் வகுப்பு மாணவி மோனிஷா 10ஆம் வகுப்பில் 491 மதிப்பெண் பெற்றதை பாராட்டி கல்வி உதவி தொகை மாவட்ட ஆட்சியர் மூலம் மாணவிக்கு வழங்கப்பட்டது.

அந்த மாணவி மோனிஷா மாவட்ட ஆட்சியரிடம் " நான் படித்து உங்களை போல மாவட்ட ஆட்சியர் ஆக போகிறேன்" என்றார்.

உடனே நம் மதிப்புமிகு ஆட்சியர் " வாழ்த்துக்கள் மோனிஷா! என் காரில் என் இருக்கையில் உட்கார்ந்து கொள்" என கூறி  யாரும் எதிர்பாராத நிலையில் அந்த மாணவியை சற்று நேரம் ஆட்சியரின் சைரன் பொருத்திய அரசு காரில் தன் இருக்கையில் அமர வைத்து தான் நின்று கொண்டு அந்த மாணவியை புகைப்படம் எடுக்க சொன்னார்.

பின்னர் அந்த மாணவியிடம், " இந்த புகைப்படத்தை நீ பார்க்கும் போதெல்லாம் மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்ற உத்வேகம் எப்போதும் இருக்கும்.

நானும்  உன்னை போல்தான் அரசு பள்ளியில் படித்துதான் மாவட்ட ஆட்சியராக உயர்ந்தேன்" என்றார்.

இந்த நிகழ்வு அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது.

திருவண்ணாமலை  மாவட்ட ஆட்சியர் கல்விக்காக  பல பணியாற்றி வருகிறார்.

அவருடன் இணைந்து  முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களும் மாவட்ட கல்வி முன்னேற பாடுபட்டு வருகிறார்.

மாவட்ட ஆட்சியர் அளித்து வரும் ஊக்கத்தின் மூலம் திருவண்ணாமலை  மாவட்டம் இந்த ஆண்டில் மாபெரும் வெற்றி பெறும்.

மேற்காண் இந்த நிகழ்வு மாணவர்களுக்கு ஊக்கத்தை அளித்தது.

மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள் ......
வாழ்த்துக்கள்.....

No comments:

Post a Comment