www.asiriyar.net

Friday, 8 December 2017

ஆசிரியர்களைக் குழப்பலாமா? "தமிழ் இந்து" நாளிதழ் கட்டுரைக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு

☀4.12.2017 அன்று வெளியான தமிழ் இந்து வணிக வீதி பகுதியில் புதிய ஓய்வூதியத் திட்டம் லாபமா? என்ற தலைப்பில் நீரை மகேந்திரன் அவர்கள் எழுதியிருந்தார்.

☀அதில் கட்டுரையின் தலைப்பிற்கும், கட்டுரையின் கருத்திற்கும் தொடர்பின்றி இருந்தது.

☀மேலும் புதிய ஓய்வூதியத் திட்டம் என்பதற்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு அறியாமல் கட்டுரை வெளிவந்தது புதிய ஓய்வூதியத்திட்டத்தின் கீழ் உள்ள அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களைக் குழப்பத்தில் ஆழ்த்துவதோடு மன வருத்தத்தையும் அளிக்கிறது.

☀புதிய ஓய்வூதியத் திட்டம் என்பது கடந்த 1.1.2004 முதல் மத்திய மற்றும் மாநில அரசில் புதிதாக பணியேற்பவருக்கு பொருந்தும்.

☀1.5.2009 முதல் இது அனைத்து குடிமக்களுக்கானத் திட்டமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

☀இதை PFRDA ஆணையம் மூலம் நிதி மேலாளர்கள் நிர்வகித்து வருகின்றனர்.

☀ஆனால் தொழிலாளர் வருங்கால வைப்புநிதித் திட்ட ஓய்வூதியம் என்பது 1956 முதல் நடைமுறையில் உள்ள தொழிலாளர் நலத்திட்டமாகும். இதில் அவ்வப்போது சில மாற்றங்களுடன் நடைமுறையில் இருந்து வருகிறது.

☀இதனை EPFO என்ற அமைப்பு மூலம் இந்தியா முழுவதும் உள்ள மண்டல அலுவலகங்கள் வழியாக நிர்வகிக்கப்பட்டு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூபாய் 1000 வழங்கப்பட்டு வருகிறது.

☀இத்திட்டத்தில் இந்தியா முழுவதும் 4.7 கோடி தொழிலாளர்கள் இணைந்துள்ளனர்.

*☀அரசு ஊழியர்களைப் பொறுத்தமட்டில் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் குறைந்தபட்ச ஓய்வூதியம் என்பது இதுவரை உறுதிப்படுத்தவில்லை.*

☀மேலும், இதற்கான சட்டம் என்பது 19.9.2013 அன்றுதான் நிறைவேற்றப்பட்டது.

☀எனவே இக்கட்டுரை புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கடுமையாகப் போராடி வரும் இச்சூழலில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களை தேவையற்ற குழப்பத்திற்குள் ஆழ்த்தியுள்ளது.

☀அதிக விழுக்காடு ஆசிரியர்கள் வாசிக்கும் தமிழ் இந்து நாளிதழில், கட்டுரை வெளியிடும் முன் அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தி வெளியிட்டால் தேவையற்ற சச்சரவுகளை தவிர்க்கும்.

No comments:

Post a Comment