www.asiriyar.net

Monday, 4 December 2017

பான் - ஆதார் இணைக்க அவகாசம் மேலும் நீட்டிப்பு?

பான் எனப்படும், வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை, ஆதார் அடையாள எண்ணுடன் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற, மத்திய அரசின் நிலைப்பாட்டை, உச்ச நீதிமன்றம் ஏற்றது.

இதையடுத்து, ஆதாருடன், பான் எண்ணை இணைக்க, மூன்று முதல்ஆறு மாதங்கள் வரை அவகாசம் அளிக்கப்படும்' என, உச்ச நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.போலி பான் எண்களை ஒழிக்கும் நோக்கிலும், கறுப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கிலும், பான் எண்ணை, ஆதாருடன் இணைப்பதை கட்டாயமாக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு, இம்மாதம், 31 வரை அவகாசம் தரப்பட்டுஉள்ளது.மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு தரப்பில் ஆஜரான மூத்த அதிகாரி தெரிவித்ததாவது:போலி பான் எண்களை ஒழிப்ப தால், பினாமி பரிவர்த்தனைகள் ஒழிக்க படும். ஆதாருடன், பான் இணைப்பதை உச்ச நீதிமன்றம் ஏற்றதால், இவற்றை இணைப்பதற் கான அவகாசத்தை, மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை நீட்டிக்க, மத்திய அரசு விரும்புகிறது.

கருணை அடிப்படையில் அளிக்கப்படும் அவகாசத்திற்கு பின்பும், ஆதாருடன் இணைக் கப்படாத பான் எண்கள் செல்லாததாகி விடும்.போலி பான் எண்கள், நாட்டின் பொருளாதாரத்துக்கு ஆபத்தை ஏற்படுத்து கின்றன. இந்த எண்களை பயன்படுத்தி வங்கி கணக்குகள் துவங்கப்படுகின்றன.அவற்றில் நடக்கும் போலி பரிவர்த்தனைகள் குறித்து, வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்படுவதில்லை. எனவே, போலி பான் எண்களால் ஏற்படும்அபாயம் குறித்த கவலை, அரசுக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment