www.asiriyar.net

Monday, 4 December 2017

பிளஸ்1 பொதுத்தேர்வு அரையாண்டு பரீட்சைக்காக 32 மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரி வினாத்தாள் தயார்: மாவட்ட வாரியாக அனுப்பும் பணி தீவிரம்

பிளஸ் 1 பொதுத்தேர்வு மாணவர்கள் அரையாண்டு தேர்வு எழுத 32 மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான வினாத்தாள்கள் தயார் செய்து, அவற்றை மாவட்ட வாரியாக அனுப்பும் பணி தீவிரமடைந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு வரை பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் மட்டுமே அரசு பொதுத்தேர்வாக நடத்தப்பட்டது. பிளஸ் 1 தேர்வு சாதாரணமாக நடத்தப்பட்டது.இதனால் சில பள்ளிகளில் பிளஸ் 1 பாடங்களை நடத்தாமலே, பிளஸ் 2 பாடங்களை நடத்தியுள்ளனர்.

 இந்நிலையில் மருத்துவபடிப்பில் சேர அகில இந்திய அளவில் நடத்தப்பட்ட நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் பிளஸ் 1 பாடங்களில் இருந்து பல கேள்விகள் இடம் பெற்றிருந்து. இதை தமிழக மாணவர்கள் எதிர்கொள்ள முடியாமல் பெயிலாகினர். எனவே தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வும் 2017-2018ம் கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வாக நடத்தப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் மாணவர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் அச்சமடைந்துள்ளனர். இதைபோக்க 54 ஆயிரம் மாதிரி வினாத்தாள்கள் தயார் செய்யப்பட்டு அதன் மூலம் மாணவர்கள் பொதுத்தேர்வை எதிர்கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில் பிளஸ் 1 மாணவர்களுக்கு வரும் 7ம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வுக்கான வினாத்தாள்கள் பொதுத்தேர்வு வடிவில் 32 மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான வினாத்தாள்கள் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. இந்த வினாத்தாள்களை மாவட்ட வாரியாக பிரித்து அனுப்பும் பணி நாளை தொடங்குகிறது.மேலும் பிளஸ் 1 மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வை பொதுத்தேர்வுபோல் அந்தந்த பள்ளிகளிலேயே நடத்த வேண்டும். இந்த தேர்வை பள்ளி ஆசிரியர்களையே கண்காணிக்க செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment