www.asiriyar.net

Saturday, 16 December 2017

தற்காலிக ஆசிரியர்களுக்கு சம்பளம் தர ரூ.4.63 கோடி

அரசு பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க, 4.63 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ்2 வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும், முதுநிலை ஆசிரியர்கள் பணியிடத்தில், 3,000க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன.

ஆசிரியர்கள் இல்லாமல், மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதால், பெற்றோர் - ஆசிரியர் கழகத்தின் நிதியில், தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.இதில், 2016 ஆசிரியர்கள், ஜூலை முதல் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு மாத சம்பளமாக, 7,500 ரூபாய் வழங்க, உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக, தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில், 4.63 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக, ஆசிரியர்கள் பணியாற்றிய நாட்களுக்கு மட்டும், சம்பளம் வழங்கும்படி, மாவட்ட அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி இணை இயக்குனர், உமா உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment