www.asiriyar.net

Sunday, 26 November 2017

ஜே.இ.இ., பிரதான தேர்வு டிச.,1 முதல் பதிவு துவக்கம்

தேசிய உயர்கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி.,யில், இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான, ஜே.இ.இ., நுழைவுத் தேர்வுக்கு, டிச., 1 முதல் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு
உள்ளது.

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், ஐ.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்ற, உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜி., படிக்க, நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், பொதுத் தேர்வுக்கு பின், உயர்கல்வி நிறுவனங்களில் சேர, ஜே.இ.இ., என்ற, பிரதான நுழைவுத் தேர்வு அறிவிக்கப்பட்டு
உள்ளது. இதை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்துகிறது.பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., - பி.பிளான் ஆகிய படிப்புகளில் சேர, இரண்டு தாள்களுக்கு, ஏப்., 8ல் எழுத்துத் தேர்வு நடக்கிறது.

கணினி வழி தேர்வு, ஏப்., 15, 16ல் நடக்க உள்ளது. இரண்டில், ஏதாவது ஒரு வகை தேர்வில் பங்கேற்க வேண்டும். இதற்கான ஆன்-லைன் பதிவு, டிச., 1ல் துவங்கி, ஜன., 1ல் முடிகிறது. கூடுதல் விபரங்களை, https://jeemain.nic.in என்ற
இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment