அரசாணை 303 ன் பக்கம் 15 ல் உள்ள Rule 11(3) ல் உள்ள maximum permissable pay என்பதனை தவறாக புரிந்து, இந்த அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட ஊதியம் - maximum permissable pay என்பதை தற்போதைய pay matrix level - ல் கடைசி cell ஐ பார்த்து அதை அடைந்த பின்னர் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை தான் increment என தவறுதலாக
Rule 15(3) ஐ பார்க்கும் முன்னர் existing pay என்பதை நண்பர்கள் புரிய வேண்டியது அவசியம். Existing pay structure என்பது முந்தைய ஊதிய அமைப்பு அல்லது விகிதம் ஆகும். ஊதிய குழு விதிகளில் சில இடங்களில் இதனை Pre revised scale எனவும் குறிப்பிடுவர். எனவே existing pay or Pre revised scale என்பது முந்தைய ஊதிய அமைப்பு, அதாவது ஆறாவது ஊதிய குழு ஊதிய விகிதம் அல்லது அமைப்பு என்பதை முதலில் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
*தற்போது விதி 11(3) ஐ பார்ப்போம்*
Maximum permissable pay of the applicable pay or scale in the existing pay structure என்பது முந்தைய ஊதிய விகிதத்தில் அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட ஊதியம் என்பதாகும். அதாவது உதாரணமாக இ.நி.ஆ.பொறுத்தவரையில் 5200-20200+2800 என்ற ஊதிய விகிதத்தில் அதிகபட்சம் அனுமதிக்கப்பட்ட ஊதியம் என்பது 20200+2800 என்பதாகும். ( இவ்வாறே பக்கம் 29 - ன் அட்டவணையிலும் உள்ளது.)
அடுத்ததாக for more than two year as on Ist January 2016 என்ற வரிகளுடன் இவ்விதியை படித்தால், 1.1.16. - ல் இரண்டாண்டுகளுக்கு மேலாக முந்தைய ஊதிய விகிதத்தில் ( அதாவது ஆறாவது ஊதிய குழு ஊதிய விகிதத்தில்) அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச ஊதியத்தை பெற்றுவரும் ஊழியருக்கு, அவர் அதிகபட்ச ஊதியத்தை அடைந்த பின்னர் உள்ள காலங்களுக்கு, ஒவ்வொரு இரண்டாண்டுகளுக்கு ஒரு ஊதிய உயர்வு அனுமதிக்கப்பட்டு ஊதியம் கணக்கிடப்படும்.
தற்போது இதனை புரிய பக்கம் 29 - ன் அட்டவணையை பாருங்கள்.
முந்தைய ஊதிய விகிதத்தில் PB 1A - ல் 4800 - 10000 + GP 1300 - ல் உள்ள ஒருவரது அதிகபட்ச ஊதியம் 4800 - 10000 ல் உள்ள 10000+1300 =11300 ஆகும். இவ்வாறாக ஒருவர் maximum permissable pay 1.7.13 - ல் பெற்றுவிட்டால் அவருக்கு தற்போது 2.57 ஆல் பெருக்க அனுமதித்து, அவர் 1.7.13 லேயே அவரது முந்தைய ஊதிய விகிதத்தில் (4800-10000+1300 ) அதிகபட்ச ஊதிய தொகையை அடைந்து விட்டதால் 1.7.13 - ல் அதிகபட்ச ஊதியமான 11300×2.57 ல் பெருக்கி pay matrix - ல் 29300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
1.7.13 ல் அடைந்த அதிகபட்ச ஊதியத்தை 2.57 ஆல் பெருக்கினால் அவர் 1.7.14, 1.7.15, 1.7.16 - ல் ஆறாவது ஊதிய குழு விகிதத்தில் increment பெற்றிருப்பாரே, அதனை எப்படி கணக்கில் சேர்ப்பது என்ற கேள்வி எழுகையில், அதற்காகவே அதிகபட்ச ஊதியத்தை அடைந்த பின்னர் பணியாற்றிய காலங்களான 2 years 6 months - க்கு இரண்டாண்டுகளுக்கு ஒரு increment என ஒரு increment கொடுக்கப்பட்டு pay matrix - ல் அடுக்கு cell ஆன 30200 என நிர்ணயிக்கப்பட்டடுள்ளது. ( பக்கம்.29 பார்க்கவும்) அதற்கு பிறகு வழக்கம் போல 1.7.16 ல் ஆண்டு ஊதிய உயர்வு அனுமதிக்கப்பட்டு அட்டவணையில் குறிப்பிட்பட்டுள்ளது.
இ.நி.ஆ. பொறுத்தவரையில் existing pay structure அதாவது முந்தைய ஆறாவது ஊதிய விகித அமைப்பில் 5200 - 20200+ 2800, இதில் PP யை தவிர்த்து கணக்கிட்டாலும் maximum permissable pay என்பது 20200+2800 என்பதாகும். இதனை இ.நி.ஆ.யாரும் 1.1.2016 க்கு இரண்டாண்டுகளுக்கு முன்னர் அடைந்திருக்க வாய்ப்பில்லை.
தவறான புரிந்து கொள்ளுதலினால் இவ்வாறான தகவல் பரவியதால், இதனை படித்து பொருள் அறிய நேர்ந்தது. இதற்காகவும் நண்பர்களுக்கு நன்றிகள்.
தயவுசெய்து சற்று பொறுமையாக படிக்கவும்.மேலும் அரசாணையை பொறுமையாக படிக்க நண்பர்களை வேண்டுகிறேன்.
தகவல் ஆக்கம்
உங்கள் நண்பன்
C.THOMAS ROCKLAND.
No comments:
Post a Comment