www.asiriyar.net

Sunday, 15 October 2017

FLASH NEWS : JACTTO GEO போராட்ட நாளை ஈடுசெய்ய தீபாவளியன்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணியாற்ற வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு

''ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என்று என்று கோரி வேலைநிறுத்தம் செய்த ஆசிரியர்களும், அதிகாரிகளும் தீபவாளித் திருநாள் அன்று பணியாற்ற வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது.

ஜாக்டோ-ஜியோ அமைப்பில் அங்கம் வகிக்கும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் அமைப்பினர் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 7-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொண்டனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த மதுரை உயர் நீதிமன்றம் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வேலை நிறுத்தத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று கடந்த மாதம் 16-ஆம் தேதி ஆணையிட்டதைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.

அதேநேரத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் செய்த காலத்திற்கான ஊதியத்தை பிடித்தம் செய்யக்கூடாது என்றும், மாறாக சனிக்கிழமைகளில் பணியாற்ற ஆணையிடலாம் என நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அடங்கிய அமர்வு ஆணையிட்டது.

அதன்படி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பிடித்தம் செய்யாமல் ஊதியம் வழங்கப்பட்டது. வேலை நிறுத்தம் செய்த காலத்திற்கு பதிலாக இன்று (14.10.2017) அரசு ஊழியர்களும், பல மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்களும் பணியாற்றியுள்ளனர். அடுத்ததாக வரும் 18.10.2017 அன்று பணியாற்றும்படி கல்வித்துறை ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஆணையிடப்பட்டுள்ளது.

வேலை நிறுத்தம் செய்த கல்வித்துறை ஊழியர்களிடம் அதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் பள்ளிக்கல்வித் துறை இணை செயலாளர் எஸ்.வேதரத்தினம் பெயரில் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அனைத்து ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறதா, இல்லையா? என்பதை உறுதி செய்ய முடியவில்லை.

ஆனால், தலைமைச் செயலகம் மற்றும் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு இத்தகைய ஆணை அனுப்பப்பட்டுள்ளது. பள்ளி ஆசிரியர்கள் சிலருக்கும் இந்த ஆணை கிடைத்துள்ளது.

வரும் 18.10.2017 அன்று தீபாவளித் திருநாள் கொண்டாடப்படவுள்ளது. அன்றைய நாளில் அலுவலகம் வந்து பணிகளை கவனிக்கும்படி உத்தரவிடுவதைவிட பெரிய அபத்தம் எதுவும் உலகில் இருக்க முடியாது. கல்வித்துறையைப் பொறுத்தவரை அதிகாரிகளின் பணி என்பது ஆசிரியர்களில் எவரேனும் வந்து கோரிக்கை மனு அளித்தால் அவற்றை ஆய்வு செய்து முடிவெடுப்பது, பள்ளிகளுக்கு ஆய்வு செல்வது ஆகியவைதான்.

ஆசிரியர்களைப் பொறுத்தவரை மாணவர்களுக்கு பாடம் நடத்துவதுதான் பணியாகும். தீபவாளித் திருநாளுக்கு எந்த மாணவர்களும் பள்ளிக்கு வரமாட்டார்கள், எந்த ஆசிரியரும் கோரிக்கைகளுடன் பள்ளிக் கல்வித்துறை அலுவலகங்களுக்கு செல்லப் போவதில்லை. 

No comments:

Post a Comment