www.asiriyar.net

Tuesday 3 October 2017

FACEBOOK மூலம் மக்களை பிரித்துவிட்டேன் – மார்க் சூகர்பெர்க் வருத்தம்...!

பேஸ்புக் மூலம் மக்களை பிரித்துவிட்டதாகவும், அதற்காக தாம் மன்னிப்பு கோருவதாகவும் மார்க் சூகர்பெர்க் தெரிவித்துள்ளார். 


பேஸ்புக் மூலம் மக்களை பிரித்துவிட்டதாகவும், அதற்காக தாம் மன்னிப்பு கோருவதாகவும் மார்க் சூகர்பெர்க் தெரிவித்துள்ளார்.


முன்பெல்லாம் மொபைல் வைத்திருப்போரைதான் கைவிட்டு எண்ண முடியும். ஆனால், தற்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மொபைல் உபயோகிக்காதவர்களை கைவிட்டு எண்ணிவிடலாம். 


அந்த அளவிற்கு நாம் மொபைலோடு ஒன்றிவிட்டோம். ஒரு வீட்டில் இரண்டு ரூம் இருந்தால் அதில் ஒரு ரூமில் இருந்து மற்றொரு ரூமில் உள்ளவர்களை செல்போன் மூலம் அழைக்கிறோம். அந்த அளவிற்கு மொபைல் நமக்குள் ஊடுருவி விட்டது. 


போதாத குறைக்கு ஃபேஸ்புக் வந்ததிலிருந்து யார் யார் தெரியாதவர்களின் நட்பு கூட நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதை சிலர் மிஸ் யூஸ் செய்வதும் உண்டு. 


இந்நிலையில், பேஸ்புக் மூலம் மக்களை பிரித்துவிட்டதாகவும், அதற்காக தாம் மன்னிப்பு கோருவதாகவும் மார்க் சூகர்பெர்க் தெரிவித்துள்ளார். 


இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள அதன் நிறுவனர் மார்க் சூகர்பெர்க், தனது பணி மக்களை இணைப்பதற்கு பதிலாக, மக்களை பிரித்துவிட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார். 


இனி வரும் காலங்களில் தான் சிறப்பாக செயல்பட இருப்பதாக கூறியுள்ள மார்க் சூகர்பெர்க், அவர் எதற்காக மன்னிப்புக் கோருகிறார் என்பதை குறிப்பிடவில்லை.

No comments:

Post a Comment