www.asiriyar.net

Tuesday, 3 October 2017

டெங்கு காய்ச்சலுக்கு என்ன மருந்து? குடும்ப நலத்துறை செயலாளர் தகவல்

தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:–


டெங்கு காய்ச்சல் வந்தால், புதிதாக பறித்த பப்பாளி இலைகளில் உள்ள காம்புகளை அகற்றிவிட்டு சிறிது தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி 10 மில்லி வீதம் தினமும் 4 முறை குடிக்க வேண்டும். இப்படி 5 நாட்கள் குடித்தால் டெங்கு காய்ச்சல் தணிந்துவிடும். அதன் பிறகும் மேலும் 2 நாட்கள் அதை குடிக்க வேண்டும்.


புதிதாக பறித்த மலைவேம்பு இலையுடன் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி 10 மில்லி வீதம் தினமும் 2 அல்லது 3 முறை குடிக்க வேண்டும். 5 நாட்களில் காய்ச்சல் தணிந்த பிறகும் மேலும் 2 நாட்கள் அதை குடிக்க வேண்டும்.


10 கிராம் நிலவேம்பு சூரணத்தை எடுத்து 100 மில்லி நீருடன் கலந்து 50 மில்லியாக வற்றும்வரை கொதிக்க வைத்து, தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் குடிக்க வேண்டும். 5 நாட்களில் காய்ச்சல் தணிந்த பிறகும் மேலும் 2 நாட்கள் அதை குடிக்க வேண்டும்.


நிலவேம்பு குடிநீர், அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள சித்த மருத்துவப் பிரிவுகளில் விலையில்லாமல் வழங்கப்படுகிறது.


இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment