அரசு ஊழியர்களுக்கு, ஊதிய உயர்வை தொடர்ந்து, 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி, ஜூலை, 1 முதல், முன்தேதியிட்டு நிலுவைத்தொகை வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, நேற்று முன்தினம், 20 சதவீதம் வரை ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அகவிலைப்படியை, ௩ சதவீதம் உயர்த்தியும், நிலுவைத்தொகையை, ஜூலை, 1 முதல் முன்தேதியிட்டு வழங்கவும், தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய சம்பள ஆணையம் பரிந்துரைத்த ஊதிய விகிதத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு, ௩ சதவீதம் அகவிலைப்படி உயர்வை, முன் தேதியிட்டு வழங்கியதை தொடர்ந்து, தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதன்படி, ஜூலை முதல் செப்., வரையிலான காலத்திற்கு, உயர்த்தப்பட்ட அகவிலைப்படி நிலுவைத்தொகை, உடனடியாக வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வு, பகுதி நேர அலுவலர்களுக்கு பொருந்தாது என, தமிழக அரசு தெளிவுபடுத்தி உள்ளது.
No comments:
Post a Comment