தமிழகம் முழுவதும், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பதற்கான, 3000 பள்ளிகள் பட்டியலை, வரும், 21ம் தேதிக்குள் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.'தமிழகம் முழுவதும், அரசு பள்ளிகளில், கணினி வசதிகளுடன் கூடிய, ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும்' என, சட்டசபையில்,
110 விதியின் கீழ், முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதற்கான பணிகள் துவங்கி உள்ளன; ௪௦௩ சரகங்களில், ஏழு பள்ளிகள் வீதம் தேர்வு செய்ய, தொடக்க கல்வி இயக்குனர், கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.
ஒரு சரகத்துக்கு, நான்கு தொடக்கப் பள்ளிகள், மூன்று நடுநிலைப் பள்ளிகள் என, ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட உள்ளன. இதில், கணினி வசதி, டிஜிட்டல் திரை, நவீன ஒலி அமைப்பு வசதிகளும், 'வீடியோ கான்பரன்ஸ்' வசதிகளும் இடம் பெறும். இதற்கான பள்ளிகள் பட்டியல் தயாரிக்கும் பணியை, ௨௧ம் தேதிக்குள் முடித்து, அரசின்அனுமதி பெற, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment