www.asiriyar.net

Monday, 18 September 2017

வங்கிகளில் அதிக, 'டிபாசிட்': அரசு ஊழியர்களிடம் விசாரணை

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், வங்கிகளில் அதிக அளவில், 'டிபாசிட்' செய்த அரசு ஊழியர்கள் குறித்து, சி.வி.சி., எனப்படும் மத்திய ஊழல்கண்காணிப்பு ஆணையம் விசாரிக்க உள்ளது.

அவகாசம்:

இது குறித்து, மத்திய ஊழல் தலைமை கண்காணிப்பு ஆணையர், கே.வி.சவுத்ரி கூறியதாவது:கறுப்புப் பணத்தை ஒழிக்கும் வகையில், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு, கடந்தாண்டு நவம்பரில் வெளியானது. அதன்பின், பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கி கணக்கில் டிபாசிட் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டது.

விசாரணை:

அதிக அளவில் பணம் டிபாசிட் செய்தவர்களின் வங்கிக் கணக்குகளை, வருமான வரித் துறை கண்காணித்து விசாரித்து வருகிறது. இவ்வாறு அதிக அளவில் டிபாசிட் செய்த மத்திய அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்கை ஆய்வுசெய்ய திட்டமிட்டு உள்ளோம். இது தொடர்பாக, மத்திய நேரடி வரி வாரியத்துடன் பேசியுள்ளோம். அவர்கள் தரும்தகவல்களின் அடிப்படையில், விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment