தமிழகத்தின் அனைத்து அரசு பள்ளிகளிலும் யோகா வகுப்பு தொடங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கல்வித்துறைக்கு தமிழக அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என்றார். 6 ஆண்டுகளில் 40,433 ஆசிரியர்கள் மற்றும் 15 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
போட்டி தேர்வு மூலம் ஆசிரியர்கள் ஒளிவுமறைவின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். தனது தலைமையிலான அரசு தமிழகத்தில் கல்வி புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் பெருமிதத்துடன் கூறினார்.
ஆண்டுதோறும் கல்வி சுற்றுலாவின் கீழ், 100 மாணவர்கள் வெளிநாடு அழைத்து செல்லப்படுவார்கள் என்றும் தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் துவங்கப்படும். என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையை அவர் வழங்கினார்.
No comments:
Post a Comment