நிதியுதவி பெறும் பள்ளிகளில், உபரியாக உள்ள ஆசிரியர்களை, தற்காலிகமாக, அரசு பள்ளிகளில் மாற்றுப் பணியில் ஈடுபடுத்திக் கொள்ள, தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் அரசு மற்றும் நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில்,மாணவர் எண்ணிக்கை சரிவை சந்தித்து வருகிறது.அனைத்து மாணவர்களுக்கும், ஆதார் எண் மற்றும் எமிஸ் எண் வழங்கப்பட்டதால், போலியாகவும் மாணவர் எண்ணிக்கையை கூட்டமுடிவதில்லை.இதனால், அரசு பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் கணக்கிடும் போது, உபரி ஆசிரியர்கள் பணியிடம், ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இதனால்,ஒவ்வொரு ஆண்டும் பணி நிரவல் என்ற பெயரில், வேறுபள்ளிக்கு, உபரி ஆசிரியர்கள் மாற்றம் செய்யப்படுகின்றனர்.
ஆனால், நிதியுதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை, நிர்வாக காரணங்களால் மாற்றம் செய்ய முடிவதில்லை.உபரி ஆசிரியருக்கு சம்பளம் வழங்கப்படும் போது, தணிக்கையில் கேள்வி எழுகிறது. இதை சமாளிக்க, நிதியுதவி பெறும் பள்ளிகளில், உபரியாக உள்ள ஆசிரியர்களை, ஆசிரியர் பற்றாக்குறை உள்ள அரசு பள்ளிகளில், தற்காலிகமாக மாற்றுப் பணியில் நியமித்துக்கொள்ள, தொடக்கக் கல்வி இயக்குனர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment