www.asiriyar.net

Thursday, 28 June 2018

அரசு பள்ளி ஆசிரியை விஜயாவை பணியிட மாற்றம் செய்யக்கூடாது - மாணவர்களின் அடுத்த நெகிழ்ச்சியான போராட்டம்!


தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான பாசப்போராட்டம் தொடர்கதையாக மாறி வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தின் அரசுப்பள்ளி ஆசிரியர் பகவான் பணியிட மாற்றம் செய்யப்பட்ட போது,

அவரை அனுப்பக்கூடாது என மாணவர்களும், பெற்றோர்களும் கதறி அழுது, கோஷமிட்டு நடத்திய போராட்டம் இந்திய அளவில் கவனம் பெற்றது. தற்போது வேலூர் மாவட்டத்திலும் இதுபோல் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. 

அரக்கோணம் அடுத்த சேந்தமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் விஜயா என்பவர் தமிழ் ஆசிரியையாக பணியாற்று வருகிறார். இவரைத் தற்போது குடியாத்தம் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு பணியிடை மாற்றம் செய்து பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


இந்நிலையில், தமிழாசிரியர் விஜயாவை பணியிட மாற்றத்தை கைவிட வலியுறுத்தி மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்திற்கு பெற்றோரும் ஆதரவு வழங்கினர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் போராடத்தை கைவிடும் படி கோட்டுக்கொண்டதை அடுத்து அவர்கள் வகுப்புக்கு வென்றனர். இந்த பிரச்னை தொடர்பாக  மாணவர்களின் பெற்றோருடன் பேச்சு நடத்திய முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ், தமிழாசிரியர் விஜயா, பணி மாற்றம் தொடர்பாக உரிய பரிசீலனை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment