தமிழகத்தில் 6 -ஆம் வகுப்பு முதல் 8 -ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு தொழிற்புரட்சி குறித்த தலைப்பில், மாநில அளவிலான கருத்தரங்க போட்டி, சென்னையில் ஆகஸ்ட் 17 -ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ஆர்.இளங்கோவன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையும், பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப அருங்காட்சியகமும் இணைந்து ஆண்டுதோறும் மாநில அளவிலான தேசிய அறிவியல் கருத்தரங்கினை நடத்தி வருகின்றன. நிகழாண்டும் பள்ளி, கல்வி மாவட்டம், வருவாய் மாவட்டம் மற்றும் மாநில அளவில் இப்போட்டி நடத்தப்படவுள்ளது.
தொழிற்புரட்சி 4.0: நாம் தயாராக இருக்கிறோமா?' (Industrial Revolution (IR) 4.0: Are we prepared?) என்ற தலைப்பில், நிகழாண்டுக்கான இக்கருத்தரங்க போட்டி நடைபெறவுள்ளது.
இதில், எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். மாணவர்கள் ஆங்கிலம், ஹிந்தி அல்லது ஏதேனும் ஒரு இந்திய மொழியில் கருத்துகளை வெளிப்படுத்தலாம்.
இதில் பங்கேற்கும் மாணவர்கள் ஆறு நிமிஷங்களில் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கவும், இரண்டு நிமிஷங்கள் நடுவர்களின் கேள்விகளுக்கு மேற்குறித்த தலைப்பையொட்டி, பதிலளிக்கும் வகையிலும் கால அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாநில அளவிலான தேசிய அறிவியல் கருத்தரங்கம், ஆகஸ்ட் 17 -ஆம் தேதி நடைபெறவுள்ளதால், பள்ளி அளவில் ஜூலை 10 -ஆம் தேதிக்குள்ளும், கல்வி மாவட்ட அளவில் ஜூலை 24 -ஆம் தேதிக்குள்ளும், வருவாய் மாவட்ட அளவில் ஆகஸ்ட் 2 -ஆம் தேதிக்குள்ளும் கருத்தரங்குகளை நடத்தி முடிக்க வேண்டும்.
பள்ளி அளவில் தலைமையாசிரியர், கல்வி மாவட்ட அளவில் மாவட்டக் கல்வி அலுவலர், வருவாய் மாவட்ட அளவில் முதன்மைக் கல்வி அலுவலர் பொறுப்பு அலுவலர்களாக செயல்பட வேண்டும்.
பள்ளி அளவில் முதல், இரண்டாமிடம் பெறும் மாணவர்களை கல்வி மாவட்ட அளவிலும், கல்வி மாவட்டத்தில் முதல், இரண்டாமிடம் பெறும் மாணவர்களை வருவாய் மாவட்டத்திலும், வருவாய் மாவட்டத்தில் முதல் இடம் பெறும் மாணவர்கள் மட்டும் மாநில அளவில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்க இயலும்.
மாநில அளவிலான கருத்தரங்கம் ஆகஸ்ட் 17 -ஆம் தேதி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெறும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:
Post a Comment