ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது, அதன் பிணையத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு 10ஜிபி அளவிலான இலவச டேட்டா வாய்ப்பை அறிவித்துள்ளது.
பெரும்பாலான ஜியோ வாடிக்கையாளர்கள், இது ஜியோவின் ஹோலி பண்டிகைக்கான சலுகையாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். ஆனால் உண்மை என்னவெனில், இது நிறுவனத்தின் ஜியோடிவி (JioTV) பயன்பாட்டைப் பயன்படுத்துவதற்கான ஒரு ஊக்கமளிப்பாகும்.
தெரியாதோர்களுக்கு, ஜியோடிவி என்பது ஒரு லைவ் டிவி ஸ்ட்ரீமிங் அப்ளிகேஷன் ஆகும். இது 550-க்கும் மேற்பட்ட நேரடி தொலைக்காட்சி சேனல்களை கொண்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள 10 ஜிபி அளவிலான இலவச 10ஜிபி டேட்டாவை பெறும் வாடிக்கையாளர்களின் நீங்களும் ஒருவர் என்றால், அது வருகிற மார்ச் 27, 2018 அன்று காலாவதியாகும் என்பதும், அதன் முன் நீங்கள் 10ஜிபி அளவிலான டேட்டாவை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்பதும் குறிப்பிடத்தக்கது.
நிறுவனத்தின்படி, இந்த இலவச கூடுதல் கூடுதல் தொகுப்பானது முற்றிலும் ஒரு தானியங்கி வாய்ப்பாகும். அதாவது ஒரு சிலர் இதை பெறுவார்கள், சிலர் பெற மாட்டார்கள் என்று பொருள். எனினும், ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கில் பல ஜியோ பயனர்கள், 1299 எண்ணை அழைத்த பின்னர் தங்கள் கணக்கில் 10 ஜிபி இலவச தரவு சேர்ந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
ஆக நீங்களும் ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள், கிடைத்தால் லாபம் தானே.? நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் 1299 என்கிற டோல்பி-ப்ரீ எண்ணை அழைக்க வேண்டும், அவ்வளவு தான். சரி உங்கள் அதிர்ஷ்டத்தை சோதித்து பார்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
நீங்கள் ரூ.149/- ப்ரீபெய்ட் திட்டத்தில் இருந்தால், அது ஒரு நாளைக்கு 1.5 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. ஒருமுறை 1.5ஜிபி என்கிற தினசரி வரம்பு முடிந்த பின்னர், இலவச ஆட்-ஆன்10ஜிபி டேட்டாவை உட்கொள்வீர்கள்.
இது ரிலையன்ஸ் ஜியோவில் இருந்து கிடைக்கும் ஒரு நல்ல சைகையாகும், ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த வாய்ப்பானது அனைத்து ஜியோ வாடிக்கையாளர்களுக்கும் தகுதியானது அல்ல. இருப்பினும், முன்னர் கூறியது போல 1299 என்கிற இலவச எண்ணை டயல் செய்து பார்க்க மறக்காதீர்கள்.
No comments:
Post a Comment