www.asiriyar.net

Friday, 23 February 2018

சத்துணவு மையங்களுக்கு பப்பாளி, முருங்கை கன்று

அங்கன்வாடி மற்றும் பள்ளி சத்துணவு மையங்களுக்கு இலவசமாக பப்பாளி, முருங்கை மரக்கன்று வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.

தமிழகத்தில், அரசு மற்றும் உதவி பெறும், 40 ஆயிரம் பள்ளிகளில், 10ம் வகுப்பு வரை படிக்கும், 50 லட்சம் மாணவர்களுக்கு, சத்துணவு திட்டத்தில் மதிய உணவு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும், ஒரு வகை சாதம், பயறு வகைகள் மற்றும் தினமும் முட்டை வழங்கப்படுகிறது.பப்பாளி மற்றும் முருங்கையில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்பு, நீர்சத்து அதிகம் உள்ளது. இதனால், மையத்திற்கு ஒரு பப்பாளி, ஒரு முருங்கை மரக்கன்றை இலவசமாக வழங்க, தோட்டக்கலை துறை ஏற்பாடு செய்து வருகிறது. கன்றுகள் வளர்ந்தபின், மாணவர்களுக்கு வாரம் ஒரு நாள் முருங்கை கீரை, முருங்கை குழம்பு, பப்பாளி பழம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.சத்துணவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பள்ளிகளில் மரம் வளர்ப்பது, நிழல் தர மட்டுமின்றி, மாணவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவ வேண்டும். எனவே, பப்பாளி, முருங்கையை உணவோடு சேர்க்க, அரசு இத்திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இட வசதியிருந்தால், கூடுதல் மரங்களை நடவு செய்யலாம்' என்றார்.

No comments:

Post a Comment