www.asiriyar.net

Friday, 23 February 2018

ஆசிரியர் பயிற்றுனருக்கு இடமாறுதல் கவுன்சிலிங்

ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும், பயிற்றுனர்கள், 385 பேருக்கு, இன்று இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கிறது.அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ.,வின் கீழ், ஆசிரியர் பயிற்றுனர்கள் பணியாற்றுகின்றனர்.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,யின் தேர்வு வாயிலாக, இவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் தங்களுக்கு, ஆசிரியர் பணி வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, ஆசிரியர் பயிற்றுனர்கள், 385 பேருக்கு, ஆசிரியர்களாக பணி மாறுதல் வழங்கப்பட உள்ளது. இதற்கான, 'ஆன்லைன் கவுன்சிலிங்' இன்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில் நடக்கிறது.'முன்னுரிமை பட்டியலில் இடம்பெற்ற அனைவரும், கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும். பணி மாறுதல் வேண்டாம் என்றால், கவுன்சிலிங்கில் பங்கேற்ற பின் தெரிவிக்கலாம்' என, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் அறிவுறுத்தியுள்ளார்

No comments:

Post a Comment