www.asiriyar.net

Thursday 15 February 2018

உயர்கல்விக்கு உயிர் கொடுப்போம்

ஜனாதிபதியின் கீழ் கல்வியாளர்கள் குழு



துணைவேந்தர் கைது, பதிவாளர் தற்கொலை, பேராசிரியர் கைது போன்ற செய்திகள் கல்வி மீது மதிப்பும்,
மரியாதையும் வைத்துள்ளவர்களுக்கு மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.துணைவேந்தர் பதவி ஏலம் விடப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். மாநில கவர்னர் கண்காணித்து செயல்பட வேண்டிய இந்த பொறுப்பு, பல சமயம்தோற்று விடுவதால், இந்தஅவலநிலையினை பார்க்க முடிகிறது. இந்திய நாட்டின்ஜனாதிபதி பதவி ஒரு அலங்கார பதவியாக இல்லாமல், இந்த மாதிரி நிகழ்வுகள் நடக்கும் போது, தட்டி கேட்டு, திருத்தும் பதவியாக மாற வேண்டும்.பல்கலை வேந்தராக கவர்னர் செயல்பாடு விதி முறைகளுக்கு மீறி இருந்தால் ஜனாதிபதி தலையிட வேண்டும்.நல்ல சிந்தனையுடன் கூடிய மனித வளத்தினை உருவாக்கும் நல்ல தொழில் கூடமாக பல்கலைகள் செயல்பட வேண்டும்.பல்கலைகளில் முனைவர் பட்டம் பெற வளாகங்களில் தவறுகள் நடைபெறுகின்றன என்றுபலத்த குரல்கள் எழும்பியுள்ளது. இந்த தவறுகளை கண்டுபிடித்து திருத்த வேண்டிய நல்ல நேர்மையான அதிகாரிகள் பல்கலை நிர்வாகத்திற்கு வரவேண்டும்.முனைவர் பட்டத்திற்கான தேர்வாளர் விஞ்ஞான அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, ஆய்வு அறிக்கை மதிப்பீடு செய்யப்பட வேண்டும். ஆய்வு வழிகாட்டியிடம், தேர்வாளர்கள் பட்டியலை கேட்கும் முறை மாற்றப்பட்டு, யு.ஜி.சி.யே தேர்வாளர் பட்டியலை வெளியிட வேண்டும். அந்த தேர்வாளர் பட்டியலில் அந்தந்த மாநிலத்தினை சார்ந்த பேராசிரியர் இருக்கக் கூடாது. இந்த முறையில் தேர்வாளர்கள் நியமிக்கப்பட்டால், முனைவர் பட்டத்தின் தரம் உயரும், தவறு சரி செய்யப்படும். கறை படியாத கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைத்து அதிகாரம் கொடுத்து, உயர்கல்வி தரத்தினை உயர்த்த வேண்டியது ஜனநாயகத்தின் முக்கிய பணி.

இதில் நீதிமன்றம் தலையிட்டு நல்ல வழிமுறைகளை சொன்னாலும் வரவேற்கதக்க ஒன்று.- முனைவர் பி.எஸ்., நவராஜ் முதல்வர், அன்னை பாத்திமா கல்லுாரி, மதுரை. வேருடன் அழிக்கும் நடவடிக்கையே தீர்வுபடித்தவன் பாழாய் போனால் பாரதம் பாழாகிப்போகும் துணைவேந்தர் கணபதி கைதுக்கு பிறகு பரபரப்பாக பேசப்பட்டு வரும் உயர்கல்வி துறையில் ஊழல் இன்றைக்குநேற்று நடந்தது போன்றும் இப்போது தான் வெளிச்சத்துக்கு வந்தது போலவும் நாம் பேசிக்கொண்டு இருக்கிறோம்.கடந்த 25 ஆண்டுகளாக நடப்பது அனைவருக்கும் அப்பட்டமாக தெரியும். உயர்கல்வி துறையில் மட்டுமல்ல அனைத்து துறையிலும் ஊழல் லஞ்சம் ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது. இது எப்படி புலனாய்வுதுறைக்கு தெரியாமல் இருக்கும். ஒரு பேராசிரியரின் புகாருக்கு பிறகு, கணபதி கைதுக்கு பிறகுதான் உயர் கல்வியில் ஊழல் லஞ்சம் உள்ளதா?. எப்பொழுதும் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து இருப்பது லஞ்சமும் ஊழலும் தான்.பேராசிரியர்கள் இரண்டே பிரிவு, ஒன்று பணம் கொடுத்து வேலை வாங்கியோர், மற்றொன்று பணம் கொடுத்து வேலை வாங்க முடியாதோர். பணம் கொடுத்தால் தான் வேலை என்பது கோமோவில் இருக்கும் பாட்டிக்குக்கூட தெரியுமே.

என்னைப் பொறுத்தவரை துணைவேந்தர் கணபதி நிரபராதி... சட்டம் என்ன சொல்கிறது தப்பு செய்கிறவனை விட தப்பு செய்ய துாண்டுகிறவனுக்குத்தான் தண்டனை, அப்படி என்றால் இவருக்கு எப்படி தண்டனை தரமுடியும். 8 கோடிகள் வாங்கிக்கொண்டு தானே துணைவேந்தர் பதவியை இவருக்கு கொடுத்து இருக்கிறார்கள். அவர் போட்ட பணத்தை நேர்மையாக செயல்பட்டால் எப்படி எடுக்க முடியும். இப்படி கிளையை வெட்டி விட்டு வேலி வளராது என்றால் எப்படி. வேரோடு அல்லவா பிடுங்க வேண்டும். இல்லையென்றால் இன்னும் நுாறு கணபதிகளை அல்லவா இந்த சமூகம் உருவாக்கும்.விசாரணை நியாயமாக இருக்குமானால் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர்கள், முதலமைச்சர், மத்திய அமைச்சர், கவர்னர்... இப்படி அனைவருக்கும் இதில் பங்கு இருக்குமானால் என்ன செய்ய போகிறோம்.தர்மத்திற்காக தன்னலமற்று பொதுநலத்திற்காகசெயல்பட்ட கல்லுாரிகள் கூட இன்றைக்கு பணம் கொடுத்து அனுமதி வாங்கி, அதிகமாக பணம் பெற்று பேராசிரியர்களை நியமனம் செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இங்கே பணம் மற்றும் சிபாரிசு இல்லாத எத்தனையோ பட்டதாரிகளின் அரசாங்க வேலை என்ற கனவு கனவாகவே போய் விடுகிறது. திறமைக்கும் தகுதிக்கும் இங்கே ஏது மரியாதை? பல்கலைகள், உறுப்புக் கல்லுாரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகள் உட்பட அனைத்துபேராசிரியர்கள் பணியிடங்களை தனி ஆணையம் அமைத்து நியமனம் மேற்கொள்ள வேண்டும்.உயர்கல்வி துறையில் மாற்றத்தை ஏற்படுத்த சரியான தருணம் இது.- முனைவர் சீ.ஜெயக்குமார் பேராசிரியர், பசும்பொன் முத்துராமலிங்கம் கல்லுாரி, சங்கரன்கோவில்.

தேச பக்தியுடனான கல்விநாம் அனைவரும் அரிச்சந்திரன் வரலாறு அறிவோம். தனது மனைவி தனது மகன் பிணத்துடன் வரும்போது மாயானத்திற்குஉரிய கட்டணத்தை கொடு என கேட்டவன். இடுகாட்டை காக்கும் தொழில் செய்து “செய்யும் தொழிலே தெய்வம்” என்பதற்கு நமது நாட்டில் பழமையான உதாரணமாக விளங்கியவன், அரிச்சந்திரன்.இப்படிப்பட்ட நம் நாட்டில் ஏன் இந்த ஊழல் நிலை? நாடு சுதந்திரம் அடையும் முன் ஆங்கிலேய அரசின் 'மெக்காலே கல்வி'யின் தாக்கம் தான் இது.

 குமாஸ்தாக்களை உருவாக்கும், தன் தேசம் மீது பக்தி இல்லாத, அதன் சிறப்பு அறியாத கல்வி முறை கொடுக்கப்பட்டு வருகிறது.மதசார்பற்ற நாடு என அறிவிக்கப்பட்டது. மதசார்பற்ற கல்வியும் அதனால் அமைந்தது. மைனாரிட்டி சலுகைகளும் அவர்தம் வாக்குகளை பெற அவர்களை திருப்தி செய்ய வேண்டும் என்ற அணுகுமுறையும் வந்தது.அதன் பலன் தான் இன்றைய சூழ்நிலை. மத சார்பற்ற அரசு என்று தன்னை கூறிக்கொள்ளும் அரசு ஹிந்து கோயில் வருவாயை மட்டும் எடுக்கும், மாற்று மத வழிபாட்டு தல வருவாயை எடுப்பதில்லை. அவ்வாறு ஹிந்து கோயில் வருவாயை எடுக்கும் அரசு ஹிந்துக்களுக்கு அதன் தர்மத்தை போதிக்கவில்லை. அதன் விளைவு, தர்மம் இல்லாத கல்வி.

இதன் தாக்கம், தொழிலில் ஊழல். பொது கல்வியில் ஹிந்து தர்மம் கற்று கொடுக்க ஆட்சேபனை இருப்பின் ஹிந்து ஆலயங்களில் அவர்களுக்கு ஹிந்து தர்மம் போதிக்கபட்டு இருக்கவேண்டும். அவ்வாறு இல்லை. அதன் விளைவே இந்த நிலை. தேசபக்தி இருக்கும்பட்சத்தில் தான் தொழில் நேர்மை இருக்கும். இதுவே இன்றை கல்வி முறைக்கு அவசியம் தேவை.- பழனிசாமி முன்னாள் கூடுதல் துணை பொது மேலாளர் பி.எஸ்.என்.எல்., மதுரை.

No comments:

Post a Comment