www.asiriyar.net

Thursday, 15 February 2018

கல்வி கட்டண பாக்கியை மாணவர்களிடம் கேட்க கூடாது'

புதுடில்லி: 'தனியார் பள்ளிகளில், கல்வி கட்டண பாக்கி குறித்து, மாணவர்களிடம் கேட்காமல், பெற்றோரிடம் கேட்க வேண்டும்' என, மத்திய குழந்தைகள் நல உரிமைகள் கமிஷன், அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதி உள்ளது.


தெலுங்கானாவில் உள்ள, ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் மாணவனிடம், கட்டண பாக்கி குறித்து, பள்ளி நிர்வாகம் கேட்டதால், அந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டான்.இதையடுத்து, 'மாணவர்களிடம் கல்வி கட்டண பாக்கி குறித்து கேட்கக் கூடாது' என, தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தும்படி, தேசிய குழந்தைகள் நலஉரிமைகள் கமிஷன், அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதி உள்ளது.அதன் விபரம்:கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களிடம், ஆசிரியர்கள் கடுமையாக நடந்து கொள்வதாகவும், தண்டிப்பதாகவும், பெற்றோரிடம் இருந்து புகார்கள் வந்துள்ளன.

இது, குழந்தைகள் நல உரிமை மீறல். எனவே, தனியார் பள்ளிகள், கட்டண பாக்கி குறித்து, பெற்றோரிடம் மட்டும் பேச வேண்டும். மாணவர்களை துன்புறுத்துவதோ, வகுப்பை விட்டு வெளியேற்றுவதோ கூடாது. மாநில அரசுகள், தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment