www.asiriyar.net

Monday, 29 January 2018

TRB : புதிய தேர்வுகள் தற்போது கிடையாது!!!

பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு பிரச்னை யால், பேராசிரியர் நியமனத்திற்கான தேர்வு நடத்துவதும், சிறப்பு ஆசிரியர் தேர்வு முடிவு களை வெளியிடுவதும் நிறுத்தப்பட்டு உள்ளது.

அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், 1,058 பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., சார்பில், செப்டம்பரில், எழுத்து தேர்வு நடத்தப்பட்டது; இதில், 1.33 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள், நவம்பரில் வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பும் அறிவிக்கப்பட்டது. ஆனால், தேர்வில் பலர் முறைகேடாக மதிப்பெண் பெற்றிருப்பதாக, டி.ஆர்.பி.,க்கு கடிதங்கள் வந்தன. இதுகுறித்து, டி.ஆர்.பி., உறுப்பினர் செயலர், உமா விசாரணை நடத்தினார். அதில், பல தேர்வர்கள் முறைகேடு செய்து, மதிப்பெண்பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.


இதையடுத்து, தேர்வு முடிவுகளை ரத்து செய்து, டி.ஆர்.பி.,யின் பொறுப்பு தலைவர், ஜெகனாதன் உத்தரவிட்டார். தொடர்ந்து, அனைத்து தேர்வர் களின் விடைத்தாள் நகல்களும், விடைக்குறிப்பு களும் இணையதளத்தில் வெளியிட பட்டன. முடிவில், தேர்வர்கள் தங்கள் விடைத் தாள்களை... தாங்களே மதிப்பிட்டு பார்த்ததில், 200 பேருக்கு, அவர்களின் விடைத் தாளில் உள்ளதை விட, பட்டிய லில் அதிக மதிப்பெண் பெற்றது தெரிய வந்தது.


இதுகுறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக, குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, அரசு பள்ளி ஆசிரியர், தனியார் தேர்வு பணி நிறுவன ஊழியர் உட்பட, ஐந்து பேரை கைது செய்து உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. துறை ரீதியாக விசாரணை நடத்த, டி.ஆர்.பி.,
தலைவர் பதவியில், சீனிவாசன் என்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.


இந்நிலையில், பாலிடெக்னிக் தேர்வு ஊழல் பிரச்னை முடியாததால், அரசு கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணியில், 1,883 இடங்கள் மற்றும் வேளாண் பயிற்றுனர் பணியிடங் களுக்கான தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன. அரசு பள்ளி சிறப்பு ஆசிரியர் பணியிடத்துக்கு நடந்த தேர்வின் முடிவுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

1 comment:

  1. It may seem surprising because Mirage is one of the most efficient nonhybrid car rated at 40 mpg in city and 43 on highway and comes with starting price of $14,395.
    Mitsubishi Mirage Interior

    ReplyDelete