வருமான வரிச் சட்டம், 1961, பிரிவு, 80 சி,யின் கீழ், ஆயுள் காப்பீடு, பங்கு சந்தை சார்ந்த சேமிப்பு திட்டங்கள், வருங்கால வைப்பு நிதி திட்டம், தேசிய சேமிப்பு சான்றிதழ்கள், வரிச் சலுகைக்காக, வஙகிகளில் ஐந்தாண்டுகளுக்கு செய்யப்படும், 'டெர்ம் டிபாசிட்'டுகள்,
மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டங்களில், 1.5 லட்சம் ரூபாய் வரை செய்யப்படும் டிபாசிட்டுகளுக்கு, வரிச் சலுகை வழங்கப்படுகிறது.தவிர, பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டமான, சுகன்யா சம்ருதி திட்டம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, வீட்டு கடன் திட்டத்தில் திரும்ப செலுத்தப்படும் அசல் தொகை உள்ளிட்டவையும் இந்த வரிச் சலுகையில் அடங்கும்.
இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளை பராமரிக்கும் குடும்பத்தாருக்கு, வருமான வரிச் சலுகையை கூடுதலாக வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பும், வரும் பட்ஜெட்டில் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ReplyDeleteJeep Compass has scored some pretty good safety scores