'அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள, மத்திய பட்ஜெட்டில், வருமான வரி செலுத்துவோருக்கு சாதகமான அம்சங்கள் இடம் பெறும் வகையில், அறிவிப்புகள் இருக்கும்' என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வருமான வரி சட்டம், 1961, பிரிவு 80சி,யின் கீழ், தற்போது வழங்கப்படும் வரி சலுகையை, 1.5 லட்சம் ரூபாயிலிருந்து, இரண்டு லட்சமாக உயர்த்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.தற்போதைய பட்ஜெட்டில், முறையாக வரி செலுத்துவோருக்கு சலுகை அளிக்கவும், பொதுமக்களின் சேமிப்பை அதிகரிக்கவும், சில அறிவிப்புகளை வெளியிட, மத்திய அரசுதிட்டமிட்டுள்ளது.
இது குறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: ஏராளமானோர் வரி ஏய்ப்பில் ஈடுபடும் நிலையில், மாத சம்பளம் பெறுவோர், சிறு தொழில் முனைவோர், பெண்கள், மூத்த குடிமக்கள் போன்ற பிரிவுகளை சேர்ந்தோர், முறையாக வரி செலுத்தி வருகின்றனர். இவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், இவர்களின் சேமிப்பை அதிகரிக்கும் வகையிலும், வருமான வரி சட்டசம், 1961, பிரிவு, 80 சி, யின் கீழ் சேமிக்கும் தொகையில், 1.5 லட்சம் ரூபாய் வரை வருமான வரி விளக்கு அளிக்கப் படுகிறது.இவர்களின் சேமிப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், இந்த உச்சவரம்பை, இரண்டு லட்சம் ரூபாயாக உயர்த்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், தனி நபர் சேமிப்பு உயர்வதுடன், வங்கிகளில் குவியும் டிபாசிட் தொகையும் பெருமளவு உயரும்.இதுகுறித்து, ஆடிட்டர்கள், நிதியியல் வல்லுனர்கள், மத்திய அரசு உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசி, மத்திய அரசு, விரைவில் நல்ல முடிவெடுக்க உள்ளது. இது குறித்த அறிவிப்பு, வரும் பட்ஜெட் கூட்ட தொடரிலேயே வெளியாக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த அறிவிப்பு வெளியானால், அது, மாத சம்பளம் பெறும், மத்திய தர வகுப்பு மக்கள், பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும்.
இது, மத்தியில் ஆளும், பா.ஜ., அரசுக்கு, எதிர் வரும் தேர்தல்களில் ஓட்டு வங்கியாக மாறவும் வாய்ப்புள்ளதாக,பா.ஜ., வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
ReplyDeleteThe 2018 Nissan 370Z is built with the same signature engine used in the previous model with improvements.