☀கல்வி மேலாண்மைத் தகவல் முறையில் மாணவர் தரவுகளை இணையத்தில் பதிவேற்றும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
☀ஒரு பள்ளியில் இருந்து மாறுதலில் செல்லும் மாணவரின் தரவை இணையப்பதிவிலும் வெளியேற்ற (TRANSFER) வேண்டும்.
☀வெளியேற்றப்பட்ட மாணவரின் தரவு பொதுப்பகுதிக்குச் (COMMON POOL) சென்றுவிடும். அதன்பின் புதிய பள்ளியின் இணையப் பக்கத்தில் அவரைச் சேர்த்துக் (ADMIT) கொள்ளலாம்.
☀ஆனால், பல பள்ளிகள் மாறுதலில் சென்ற மாணவர் விபரங்களை வெளியேற்றாதே உள்ளனர். புதிய பள்ளியில் இருந்து தொடர்பு கொண்டாலும் உரிய பதில் அளிக்காது இருப்பது மாநில அளவில் புகாராக உருவெடுத்ததையடுத்து,
☀வெளியேற்றப்பட வேண்டிய மாணவரை வெளியேற்றித் தருமாறு மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கு தகவல் அறிவிக்கும் (REQUEST RAISE) வசதி தற்போது புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
☀இதன்படி வெளியேற்றப்பட வேண்டிய (நமது பள்ளியில் புதிதாகச் சேர்க்கப்பட்ட) மாணவரின் EMIS எண்ணை STUDENT SEARCH-ல் கொடுத்துத் தேடுகையில் அம்மாணவன் COMMON POOL-ற்கு மாற்றப்படாது இருப்பின் REQUEST RAISE என்ற பொத்தான் உடன் அம்மாணவரின் தகவல் இருக்கும்.
☀REQUEST RAISE பொத்தானை அழுத்தி YES & OK செய்தால் 3 தினங்களுக்குள் அம்மாணவரின் தரவு COMMON POOL-ற்கு அப்பள்ளி அனுப்பிவிட வேண்டும்.
☀இல்லை எனில் ஒரு வாரத்திற்குள் இப்பணியை மாவட்ட ஒருங்கிணைப்பாளரே மேற்கொள்வார்.
We expect the new Camry to be priced similar to the now-discontinued model.
ReplyDelete2018 Toyota Camry Hybrid Review