www.asiriyar.net

Sunday, 21 January 2018

Emis ID card entry Tips

 1)உங்கள் ஆண்ட்ராய்டு போனில் உங்க பள்ளி மாணவர்களை வகுப்பு வாரியாக போட்டோ எடுத்துக்கொள்ளவும்.                      
2)மாணவர்களின் ஆதார்,ரத்த வகை,விலாசம் போன்றவற்றை அருகில் வைத்துக்கொள்ளவும்.        


3)உங்கள் போனில் நெட் கார்டு ,பேட்டரி சார்ஜ் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.                                      
4)போனில் மொபைல் டேட்டாவை ஆன் செய்யவும்.                                
5)போனில் play store க்குச் செல்லவும்.                                        
6)play store ல்"emis tamilnadu"என type செய்து search பண்ணி,அதை பதிவிறக்கம் செய்யவும்.                                            (ஒருசிலர் போனில் update செய்யச்சொன்னால் செய்து கொள்ளவும்).                                   
 7)இப்போது உங்களுக்கு "அடையாள அட்டை செயலி"என்றொரு பக்கம் open ஆகி இருக்கும்.                                 
8)இப்போது அப்பக்கத்தை touch செய்தால் ,username,password கேட்கும்.                                  
 9)உங்க பள்ளியின் DISE code மற்றும் emis பதியும் போது நீங்கள் பயன்படுத்திய password பதியவும்.   
10)இப்போது உங்க பள்ளியின் பெயர் &முகவரியுடன் புதிய பக்கம் open ஆகி இருக்கும்.                       
 11)அப்பகுதியில் உள்ள.        "student ID card"ஐ touch செய்யவும்.                                        
12)இப்போது புதிய பக்கம் open ஆகி அதில்.                               "data approval"&"Id approval"என்ற இரு பகுதிகள் வரும்.                                                 
13)நீங்க இப்போ"data approval "ஐ touch செய்யவும்.                               
14)இப்போது உங்கள் பள்ளியில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை.                            (emis பதிவு செய்துள்ளபடி)வகுப்புவாரியாக காட்டப்படும்.                                     15)இப்போது முதல் வகுப்பை touch செய்யவும்.                                       
16)இப்போது முதல்வகுப்பு மாணவர்களின் ஒவ்வொரு பெயரும் வரிசையாக emis எண்ணுடன் தெரியும்.                                           
17)நீங்க இப்போ வரிசையாகவோ,அல்லது நீங்க விருப்பப்பட்ட மாணவரையோ touch செய்யவும்                                         
18)இப்போ நீங்க தேர்வு செய்த மாணவனின் விபரம் திரையில் தெரியும்.               19)அம்மாணவனின் புகைப்படம் இருக்க வேண்டிய இடத்திற்கு மேல்"Edit"என இருக்கும்.               
 20)அதை touch செய்யவும்.               
21)அம்மாணவனின் புகைப்படம் இருக்க வேண்டிய இடத்தில் உள்ள "camera"அடையாளத்தை touch செய்யவும்.                                        
 22)இப்போது போட்டோ எடுக்க வேண்டுமா அல்லது போனில் உள்ள போட்டோவைத் தேர்வு செய்ய வேண்டுமா?என கேட்கும்.                
23)போட்டோ நமது போனிலேயே உள்ளதால் "Gallery "என touch செய்யவும்
24)இப்போது உங்களது போனில் உள்ள அனைத்து போட்டோக்களும் open ஆகும்.                                 
25)இப்போது உங்களுக்கு தேவையான மாணவனின் பகைப்படத்தினை touch செய்தால்,அப்படம் அம்மாணவனின் விபரங்கள் அடங்கிய (போட்டோ இருக்க வேண்டிய வட்டத்தில் சென்று சேர்ந்து விடும்,).                   
26) அம்மாணவனின் முகம் நன்கு தெரியும் படி அவ்வட்டத்தில் adjust 27)அதன்பின்,அம்மாணவனின் போட்டோவுக்குக் கீழே உள்ள ரத்த வகை,ஆதார் விலாசம் ஆகியவற்றில் ஏதேனும் இல்லையெனில் பதிவு செய்யவும்.                                          
28)இறுதியாக அப்பக்கத்தின் அடியில் உள்ள "data approval "என்ற இடத்தை touc செய்தால் அம்மாணவனின் விபரம் பதியப்பட்டு விட்டதாக "successfully "என வரும்                                               
29)அதே போல் ஒவ்வொரு மாணவனுக்கும் பதிவு செய்யவும்.     
30) அனைத்து மாணவர்களுக்கும் பதிவிட்டவுடன் "செயலி"யை விட்டு வெளியேறவும்.                                 
31)இப்போது உங்கள் பள்ளி மாணவர்களுக்கு "data approval "(35 மாணவர்களுக்கான பதிவு செய்துவிட்டோம்,வேறு எவரும் இல்லையென்றால் 35/0 என காட்டும்.                                            
 32)இப்போது data approval க்கு கீழ் உள்ள "ID card "ஐ தேர்வு செய்தால் ,நீங்கள் தற்போது பதிவிட்ட மாணவர்கள் விபரம் போட்டோவுடன் வரும்.                      33)அம்மாணவர்களின் விவரங்களுக்கு அடியில் தெரியும். "id card approval "என்பதை touch செய்தால் I'd card approval successfully "என வரும் .               34)இதை ஒவ்வொரு மாணவனுக்கும் touch செய்யவும்.     
35)எல்லாம் முடித்து முதல் பக்கம் சென்று பார்த்தால் (eg. 35 students).    Data approval 35/0.     I'd card approval 35/0 என காட்டும்.                                                36)இப்போது நாம் முடித்து விட்டோம் என அர்த்தம்.                    

மிக்க நன்றி

1 comment:

  1. As standard, the Vantage comes shod with Alcantara upholstery, but a full-leather interior is available as an option.
    Aston Martin Vantage 2018

    ReplyDelete