மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை தீர்க்க, புதிய திட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக, அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.அவர் கூறியதாவது:தமிழக அரசு, பள்ளிக்கல்வித்துறையில், பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.
இந்த மாத இறுதிக்குள், 32 மாவட்டங்களிலும், ஐ.ஏ.எஸ்., அகாடமி துவங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். இங்கு, கட்டணம் இல்லாமல் பயிற்சி பெற, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஏழை, எளியமாணாக்கர்களின் நலனை கருத்தில் கொண்டு, கற்றல் குறைபாடுள்ளவர்களின் நிலைமையை மாற்றி அமைக்க புதிய திட்டம் கொண்டு வரப்பட இருக்கிறது.
கற்றல் குறைபாட்டைதீர்க்கும் வகையில், பில்கேட்ஸ் நிறுவனம் மூலம், நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர் கமலின் அரசியல் குறித்து, அமைச்சர் செங்கோட்டையனிடம் கேட்டபோது, 'வாழ்நாளில் மற்றவர்களின் அரசியல் குறித்து, நான் பேசியதில்லை' என, பதிலளித்தார்.
ReplyDeleteSmall engine mated to a CVT translate to 25 mpg in city and 32 on highway – impressive for an AWD vehicle.