www.asiriyar.net

Sunday, 28 January 2018

குடியரசு தினத்தில் மாணவனை கொடி ஏற்ற சொல்லிய தலைமை ஆசிரியர், ஏன் தெரியுமா..?

I
கொடியேற்றும் அந்த சிறுவன் யார் தெரியுதா..? குடியரசு தினத்தில் 
மாணவனை கொடி ஏற்ற சொல்லிய தலைமை ஆசிரியர், ஏன் தெரியுமா..?

ரோட்டில் கிடந்த ரூ.21,000 பணத்தை தலைமையாசிரியர் மூலம் காவல்துறையில் ஒப்படைத்த மாணவனை பாராட்டும் விதமாக, பள்ளியின் தேசியக் கொடியை ஏற்றச் செய்து கவுரவித்தனர்.

திருவொற்றியூரைச் சேர்ந்த மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர் தாத்தையாவின் மகன் கிப்சன் என்பவன்..
இவர், வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த 9ஆம் தேதி பள்ளிக்கு செல்லும்போது, ரோட்டில் 21 ஆயிரம் ரூபாய் பணத்துடன் கிடந்த பையை பார்த்துள்ளார்,
அதனை அவர் தனது பள்ளி தலைமை ஆசிரியர் பாஞ்சாட்சரத்திடம் கொடுத்து என்ன செய்வது என கேட்டுள்ளார், தலைமை ஆசிரியர், அதனை காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.

காவல்துறையினர் பணத்துக்கு உரிமையாளர்களை கண்டுபிடித்து ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தில் நேர்மையாக நடந்து கொண்ட மாணவனை பாராட்டும் விதமாக, சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் உள்ள ஸ்ரீ சாயி விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் ஜனவரி 26 அன்று குடியரசு தின விழாவில் கொடியேற்ற சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

அதன்படி, கிப்சனை தேசியக் கொடியை ஏற்ற செய்து கவுரவித்தனர். மேலும், மாணவனுக்கு ரூ.1,000 பரிசாக வழங்கப்பட்டது. மாணவர்கள் இது போன்று செயல்கள் செய்வதை ஊக்கபடுத்துவது மூலம் இவர்கள் வளரும் போது அதை நினைவில் கொண்டு வளருவார்கள்..

நல்ல மார்க் எடுத்தால் மட்டும்தான் பாராட்டு கிடைக்கும்என்ற பதத்தை மாற்றிய தலைமை ஆசிரியர் இங்கு பாராட்ட தக்கவர்..
மாணவர்களிடமும் இந்த எண்ணம் தற்போது உதய ஆரம்பிக்கும்..

1 comment:

  1. The Volvo S90 comes with three engine configurations: T5, T6, and an optional Hybrid T8.
    volvo s90 interior

    ReplyDelete