www.asiriyar.net

Sunday, 28 January 2018

கனவு ஆசிரியர் விருதுக்கு சிபாரிசு பட்டியல் தயாரிப்பதில் குழப்பம்!!!


தமிழக அரசின் கனவு ஆசிரியர்விருதுக்கு, சிபாரிசு அடிப்படையில், பட்டியல் 
தயாரிப்பதாக புகார் எழுந்துள்ளது. அதனால், விருதுகளை இறுதி செய்வதில், குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர் தினத்தையொட்டி, அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் சார்பில், நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.
இதுதவிர, தமிழக அரசின் சார்பில், இந்த ஆண்டு முதல், கனவு ஆசிரியர் விருது வழங்கப்படும் என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும், தொடக்கப் பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி களில், தலா, ஆறு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு விருதுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை, டிச., 26ல் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்ட அளவில் குழு அமைத்து, தோராய பட்டியலை தயாரிக்க, பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்குனர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.


மாவட்ட பட்டியலில் இருந்து, தகுதியானவர்களை மாநில தேர்வு குழுவினர் தேர்வு செய்வர். இந்த உத்தரவுகளை மாவட்ட அதிகாரிகள், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பாமலும், சில மாவட்டங்களில், தலைமை ஆசிரியர்கள், தங்களுக்கு வந்த தகவல்களை, ஆசிரியர்களுக்கு தெரிவிக்காமலும் உள்ளதாக, புகார் எழுந்துள்ளது. மேலும், கனவு ஆசிரியர் விருதுக்கு, வரும், 2ம் தேதிக்குள் மாவட்ட அளவில், தோராய பட்டியலை தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான மாவட்டங்களில், ஆசிரியர்களிடம் பொதுவான தகவல் அளிக்காமல், அதிகாரிகள், தாங்களாகவே பட்டியலை தயாரிப்பதாக, புகார்கள் எழுந்துள்ளன.அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்களின் சிபாரிசு பெற்ற வர்களுக்கு மட்டும், மாவட்ட பட்டியல் தயாரிப்பதாகவும்...
மாணவர்களின் முன்னேற்றத்துக்கு முன்னோடியாக செயல்படும், ஆசிரியர்களின் விபரங்கள் பட்டியலில் இல்லை என்றும், ஆசிரியர் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த பிரச்னையால், கனவு ஆசிரியர் விருது வழங்கும் விவகாரத்தில், புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது

1 comment:

  1. The 2018 Tesla Model S starts at $74,500 and goes up to $135,000 for the top P100D model.
    2017 tesla model s msrp

    ReplyDelete