www.asiriyar.net

Saturday, 27 January 2018

2018ம் ஆண்டு நடக்க உள்ள நீட் தேர்வுக்கு விரைவில் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

நீட் 2018 நுழைவுத்தேர்வுக்கு விரைவில் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கு 2016ம் ஆண்டுநீட் தேர்வை உச்ச நீதிமன்றம் கட்டாயமாக்கியது.
தமிழகம் ஓராண்டுக்கு விலக்கு பெற்ற நிலையில், கடந்த ஆண்டு நாடு முழுவதும் மே 7ம் தேதி சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் நீட் நுழைவுத்தேர்வு நடந்தது. அதில் 11,35,104 மாணவர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். நாடு முழுவதும் 103 மையங்களில் 10 மொழிகளில் நீட் தேர்வு நடந்தது.தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுதிய 88,000 மாணவர்களில், 15,206 பேர் தமிழில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். கடந்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி முதல் மார்ச் 1ம் தேதி வரை நீட் தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டது. அதேபோல்,இந்த ஆண்டு நீட் 2018 தேர்வுக்கு விண்ணப்பிப்பது ஜனவரிஇறுதி வாரத்தில் அல்லது பிப்ரவரி முதல்வாரத்தில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. அதுமுதல் அடுத்த 30 நாட்களுக்கு நீட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு மாநில அரசுகளின் பாடத்திட்டத்தில் இருந்தும் நீட் தேர்வில் வினாக்கள் கேட்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். இதை சிபிஎஸ்இ நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தேர்வு விதிமுறைகளை பொறுத்தவரை, கடந்த ஆண்டை ஒப்பிடும்போது எந்த மாற்றமும் இருக்காது என்று கூறப்படுகிறது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மாணவரின் ஆதார் எண், உபயோகத்தில் உள்ள மொபைல் எண், உபயோகத்தில் உள்ள இ-மெயில் முகவரி அவசியம்.

கடந்த ஆண்டுக்கான நீட் தேர்வு விதிமுறைகளை cbseneet.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம். இந்த ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. அதைத்தொடர்ந்து மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

1 comment:

  1. It offers 23/31 mpg on city/highway roads.The BMW X1 xdrive28i and the Land Rover Range Rover Evoque do not have much difference in their values.
    Range Rover mpg

    ReplyDelete