www.asiriyar.net

Friday, 6 October 2017

NAS MODEL EXAM | OCTOBER 10 & NOVEMBER 7




☀தேசிய அடைவு ஆய்வு (NATIONAL ACHIEVEMENT SURVEY) ஆண்டு தோறும் 3, 5 & 8-ம் வகுப்பு மாணவ மாணவியரிடையே தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் மட்டும் நடத்தப்பட்டு வருகிறது.

☀இந்த ஆண்டிற்கான ஆய்வுகள் நடத்தப்படுவதற்கு முன்னர் மாணவ மாணவியர்களைத் தயார்படுத்தும் பொருட்டு மாதிரித் தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

☀அதன்படி, அனைத்து ஆரம்ப, நடுநிலை, உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகளில்  3, 5 & 8-ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு

☀10.10.2017 & 7.11.2017 ஆகிய இரண்டு நாட்கள் மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.

☀இதற்கான வினாத்தாளை முன்னதாக வழங்கப்பட்ட மாதிரி வினாத்தாள் அடிப்படையில் பள்ளி ஆசிரியர்களே 15 வினாக்களைக் கொண்டு வினாத்தாள் வடிவமைத்து தேர்வு நடத்திக் கொள்ள வேண்டும்.

☀மாதிரித் தேர்வுகள் முடிவுற்ற பின்னர் தேசிய அடைவு ஆய்விற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகள் விபரமும் ஆய்விற்கான தேதியும் அறிவிக்கப்படும். 

No comments:

Post a Comment