www.asiriyar.net

Wednesday, 11 October 2017

7வது ஊதிய குழுவின் அறிக்கை - முக்கிய அம்சங்கள்


ஊதிய குழு அளித்துள்ள அறிக்கையில் கீழ் கண்ட முக்கிய அம்சங்கள் இடம் பெற்று இருப்பதாகவும் இப்பரிந்துரைகள் இன்றைய  அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படும் என தெரிகிறது...


7வது ஊதிய குழுவின் அறிக்கை - முக்கிய அம்சங்கள் :

 1) 01.01.16 முதல் ஊதிய உயர்வு முன்தேதியிட்டு வழங்கப்படும்

2) நவம்பர் 2017 முதல் புதிய சம்பளம் வழங்கப்படும்

3)  ஜனவரி 2016 முதல் அக்டோபர் 2017 வரையுள்ள நிலுவை 3 தவணையாக வழங்கப்படும்

4)  முதல் தவணை மார்ச் 2018 லும் 2 ம் தவணை செப்டம்பர் 2018லும்  இறுதி நிலுவை மார்ச் 2019 லும் வழங்கப்படும்

5) ஊதிய உயர்வு 20% முதல் 25% வரை அளிக்கப்படும்

6)  தற்போது பணிபுரிவோர் தாங்கள் 31.12.16 அன்று பெறும் ( அடிப்படை ஊதியம் + தர ஊதியம்+ தனி ஊதியம்) X 2.57 இவற்றின் பெருக்கு தொகையில் வரும் தொகையை அட்டவணையுடன் பொருந்தி அதன் தொகையே அவர் 01.01.2016 முதல் பெறும் ஊதிய உயர்வு தொகையாகும்.

7) வீட்டு வாடகை படி தற்போது பெறும் வீட்டு வாடகை படியில் 2.5 மடங்கு ஆகும்


8) மருத்துவ படி ரூ 300 என உயர்த்தப்பட்டு வழங்கப்படும்

9) இதர படிகள் அவற்றின் 2 மடங்காக வழங்கப்படும்.

10) ஓய்வூதியதாரர்களுக்கும் இது பொருந்தும்

11) ஒவ்வொரு துறைகளுக்கும் தனி தனியே அரசாணை வெளியிடப்படும்.

No comments:

Post a Comment