www.asiriyar.net

Tuesday, 19 September 2017

JACTTO-GEO : ஆசிரியர்களுக்கு, 'மெமோ' அனுப்பும் பணி நிறுத்தம்

'ஜாக்டோ - ஜியோ' போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால், வேலை நிறுத்தம் செய்த ஆசிரியர்களுக்கு, 'மெமோ' அனுப்பும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோவினர், செப்., 7 முதல், ஏழு நாட்கள், தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அரசு பேச்சு நடத்தியும், சுமுக முடிவு கிடைக்கவில்லை. பின், நீதிமன்ற தலையீட்டால், செப்., 15ல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இந்நிலையில், போராட்டம் நடந்த போது, அரசு விதிகளை மீறி, போராட்டத்தில் ஈடுபடுவதாகவும், ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும், விளக்கம் கேட்டு, ஆசிரியர்களுக்கு, 'மெமோ' வழங்கபட்டு வந்தது. போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால், உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி, 'மெமோ' அனுப்பும் பணியை, பள்ளி தலைமை ஆசிரியர்கள் நிறுத்தி உள்ளனர். பதிவு தபாலில் அனுப்பப்பட்ட மெமோக்களையும், ஆசிரியர்கள் வாங்காமல் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

No comments:

Post a Comment