www.asiriyar.net

Thursday, 12 July 2018

School Morning Prayer Activities - 12.07.2018 ( Daily Updates... )





பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள் :

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

உரை:

கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.

பழமொழி :

A guilty conscience needs no Accuser

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

பொன்மொழி:

வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்

1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.

-அடால்ஃப் ஹிட்லர்

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் சின்னத்தில் உள்ளது எது?
குடை


  2.இந்திய ரூபாய் நோட்டில் என்னென்ன மிருகங்கள் உள்ளன?
காண்டாமிருகம், யானை, புலி

நீதிக்கதை :

சேவலும் இரத்தினக் கல்லும்
( The Cock & the Jewel )




சேவலும் இரத்தினக் கல்லும் - ஈசாப் நீதிக் கதைகள். Read and download The Cock & the Jewel aesop moral story online with pictures in Tamil for kids.

அது ஒரு அழகிய பனிக்காலம். சேவல் ஒன்று வழக்கம் போல் காலையில் எழுந்து அதற்கான உணவைத்தேட தன் நண்பர்களுடன் கிளம்பியது. அந்த சேவல் தொலைவில் ஒரு குப்பைக் கிடங்கை கண்டது.



  அந்த குப்பைக் கிடங்கில் ஏதாவது உணவு கிடைக்குமா என்ற எண்ணத்துடன் கிளற ஆரம்பித்தது. அப்போது அந்த சேவலுக்கு விலை மதிப்பில்லாத இரத்தினக்கல் ஒன்று கிடைத்தது.

அந்த கல்லை சேவல் திருப்பித் திருப்பிப் போட்டது. அதைக் கண்ட மற்றொரு சேவல் வருத்தமுடன் "இந்த கல் நமக்கு கிடைத்து என்ன பயன்? ஒரு இரத்தின வியாபாரியின் கையில் இது கிடைத்திருந்தால் அவனுக்கு இதன் மதிப்பு தெரியும். நமக்கோ இந்த கல்லை விட சிறிது தாணியம் கிடைத்திருந்தால் அதுவே விலை மதிப்பில்லாத பொருளாக இருக்கும்" இந்த கல் நமக்கு உதவாது என்று கூறியது.

நீதி: ஒருவருக்கு பயன்படும் பொருளே அவர்களுக்குச் சிறந்ததாகும்.

இன்றைய செய்தி துளிகள் :

1.INSPIRE AWARD - மாணவர்கள் பதிவு செய்ய 31.07.2018 வரை கால நீட்டிப்பு!

2.தனியார் பள்ளிகளை நிர்வகிக்கும் விவகாரம்: கல்வித் துறை அரசாணையில் திருத்தம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

3.தமிழகத்துக்கு கபிணி அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு 50,000 கனஅடியாக அதிகரிப்பு

4.பொறியியல் படிப்புக்கான விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு ஜூலை 17-ம் தேதி நடைபெறுகிறது.

5. டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் 3-வது சீசன் தொடக்கம்.

2 comments: