www.asiriyar.net

Thursday 12 July 2018

ஆசிரியர்கள் இன வேறுபாட்டுடன் செயல்படக்கூடாது - NCERT





'சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் புதியதாக
பள்ளிகளை துவக்குவதோடு, பள்ளிகளில் நிலவும் மத மற்றும் பண்பாடு ரீதியிலான பிரச்னைகளை களையும் வகையில் ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்' என்று, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு (என்.சி.இ.ஆர்.டி.,) பரிந்துரைத்துள்ளது!

'பொதுவாக, பாகுபாடு மற்றும் துன்புறுத்தல்களை சிறுபான்மையின குழந்தைகள் சந்திப்பது ஒருபுறம் இருக்க, பள்ளிகள் மற்றும் வகுப்பறைகளிலேயே கலாசார மற்றும் மத ரீதியான வேறுபட்ட பிரச்சனைகளுக்கு அவர்கள் ஆளாகின்றனர். சில நேரங்களில், அவர்களது உணவு பழக்கமுறை கூட குற்றமாக கருதப்படும் சூழல் நிலவுகிறது. சில பிரிவினரால் வேறுபட்ட சீருடை பின்பற்றப்படுவதும் விரும்பத்தக்கதல்ல.
'சிறுபான்மையினரது கலாசார ரீதியான பண்டிகைகள் பள்ளிகளில் கொண்டாடப்பட வேண்டும். சிறுபான்மையினர் சந்திக்கும் இன பாகுபாடு மற்றும் பல்வேறு சவால்களை, பள்ளி பாடத்திட்டத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும்' என்றும் என்.சி.இ.ஆர்.டி., பரிந்துரைத்துள்ளது

1 comment: