'வாட்ஸ் ஆப்'பில், சர்ச்சைக்குரிய வதந்திகள் பரவாமல் தடுக்க, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ள அந்த நிறுவனம், இதில், அரசு, போலீசார் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
WhatsApp,வாட்ஸ் அப்,வதந்தி,தடுக்க,நடவடிக்கை,வாட்ஸ் ஆப்,விளக்கம்'
வாட்ஸ் ஆப்' எனப்படும் தகவல் பரிமாற்ற செயலியை, உலகம்முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர். இதில், குறுந்தகவல்கள், 'ஆடியோ, வீடியோ' பதிவுகள் உள்ளிட்டவை, நொடிப்பொழுதில் பகிரப்படுகின்றன. வாட்ஸ்ஆப் குரூப்களில் பகிரப்படும் தகவல்கள், ஒரே நேரத்தில் பலரை சென்றடைகின்றன.இந்நிலையில், சமீபத்தில் மஹாராஷ்டிரா மாநிலம், துலே மாவட்டத்தில், குழந்தை கடத்தல்காரர்கள் என்ற சந்தேகத்தில், ஐந்து பேர் அடித்து கொலை செய்யப்பட்டனர். இதே போன்ற சம்பவங்கள், நாட்டின் பிற மாநிலங்களிலும் நடந்தது. இந்த வீடியோ பதிவுகள், வாட்ஸ் ஆப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.இதுபோன்ற வீடியோக்கள் வேகமாக பரவுவதால், அது மக்கள் மத்தியில் பதற்றத்தையும், தேவையற்ற அச்சத்தையும் ஏற்படுத்துவதுடன், வன்முறையை துாண்டும் வகையிலும் இருப்பதால், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க, வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு, மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் சார்பில், மத்திய அரசுக்கு எழுதப்பட்ட விளக்க கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: வாட்ஸ் ஆப் பயன்பாட்டாளர்களின் நன்மை கருதி, அதில் பல பாதுகாப்பு அம்சங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. தகவல்களை அனுப்புவோர், பெறுவோர் ஆகிய இருவரின் சம்மதத்தின் அடிப்படையிலேயே, தகவல் பரிமாற்றம் தொடரும்.அதே போல், வதந்திகளை கட்டுப்படுத்தவும், அதனால் வன்முறை ஏற்படாமல் இருக்கவும், அரசு மற்றும் போலீசாரின் ஒத்துழைப்பு தேவை. மக்கள் மத்தியில் கலவரத்தை துாண்டும் வகையில், தகவல் பகிர்வோர் மீது, சட்ட ரீதியான நவடிக்கை எடுக்கப்படும்.
இது குறித்து, அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும். பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்க, வாட்ஸ் ஆப் நிறுவனம், மேலும் சில நடவடிக்கைளை மேற்கொள்ளும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment