www.asiriyar.net

Tuesday 3 July 2018

கழிவறை துர்நாற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த அரசுப் பள்ளி ஆசிரியரின் சூப்பர் ஐடியா!


💎இலவசம் என்றால், வசதியானவர்களுமே பெற்றுக்கொள்வது மனித இயல்பு**💎ஆனால், அரசு ஒரு விஷயத்தைக் கட்டணமின்றியும், அதனுடன் பல உதவிப் பொருள்களைச் சேர்த்து அளித்தும் பலரும் தவிர்ப்பது ஆச்சர்யமானது இல்லையா? அரசுப் பள்ளிகளைத்தான் சொல்கிறேன்.*💎மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்கள், புத்தகப் பை, காலணி உட்படப் பலவற்றை விலையில்லாமல் கொடுத்து, அரசுப் பள்ளிக்கு படிக்க அழைக்கிறது தமிழக அரசு. ஆனால், கடன் வாங்கியாவது தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளியில் சேர்க்கும் மோகம் பெற்றோர்களிடம் இருக்கிறது*


*💎இந்த மனநிலையை மாற்றுவதற்கு, தங்கள் பள்ளியைச் சிறப்பானதாக மாற்றும் முயற்சிகளில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பலரும் ஈடுபடுகின்றனர். அவர்களில் ஒருவர்தான், சேரனூர் நடுநிலைப் பள்ளியின் முருகேசன். தான் பணிபுரியும் பள்ளியில் மேற்கொள்ளும் மாற்றங்களைப் பகிர்கிறார்**💎செஞ்சி டு விழுப்புரம் வழியில் அப்பம்பட்டிலிருந்து பிரிந்துசெல்லும் சாலையில் 4 கிலோமீட்டர் வந்தால், எங்களின் சேரனூர் பள்ளிக்கு வந்துவிடலாம்*


*💎இதை ஏன் இவ்வளவு விரிவாகச் சொல்கிறேன் என்றால், அவ்வளவு உள்பகுதியில் இருக்கும் பள்ளி இது. இந்த ஊரின் மொத்த மக்கள்தொகையே 1000 பேர்தான் இருப்பார்கள். எளிமையான பொருளாதார வருமானம் கொண்டவர்களே*


*💎முதல் தலைமுறையாக கல்விக்கூடத்துக்கு வரும் குழந்தைகளும் இருக்கின்றனர். இந்த ஆண்டில், 5 வயது பூர்த்தியான குழந்தைகள் மொத்தமே 11 பேர் இருந்தனர். அவர்களில் 10 பேரை எங்கள் பள்ளியில் சேர்த்திருக்கிறோம். தனியார் பள்ளி இருந்தாலும், அரசுப் பள்ளியின் மீது நம்பிக்கை வைத்து, சேர்த்தற்குப் பாராட்டைத் தெரிவித்தோம்*


*💎அவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் விதத்தில், சிறப்பான கற்பித்தலையும் தருவோம். எங்கள் பள்ளி மாணவர்கள் ஓவியம், பேச்சுப் போட்டி போன்றவற்றில் மாவட்ட அளவிலான பரிசுகளைப் பெற்றுவருகின்றனர். கணினி வழியே கற்பதில் மாணவர்கள் கூடுதல் ஆர்வம் காட்டுகின்றனர்'' எனப் பள்ளியின் பெருமைகளை பட்டியலிட்டுத் தொடர்ந்தார்**💎மரங்களின் நிழலோடு அமைதியான சூழலில் பள்ளி அமைந்திருக்கிறது. ஆனால், கழிவறையைப் பராமரிப்பதில் சில நடைமுறை சிக்கல்கள் இருந்தன*


*💎அதனால், மாணவர்களில் சிலர் கழிவறையைப் பயன்படுத்தாமல் திறந்தவெளியில் சிறுநீர் கழித்துவந்தனர். பலமுறை சொல்லியும் இந்தப் பழக்கத்தை மாற்றமுடியவில்லை. துர்நாற்றம் வீசுவதையும் தவிர்க்க முடியவில்லை**💎இது மாணவர்களின் ஆரோக்கியத்தைக் கெடுக்குமே என வருந்திகொண்டிருந்தபோதுதான், யூடியூப்பில் ஒரு வீடியோவைப் பார்த்தேன். வாட்டர் கேன்களால் கழிவறை உருவாக்கியிருந்தார்கள். அது எனக்கு ஆச்சர்யத்தை அளித்தது. நமது பள்ளியிலும் அதைச் செயல்படுத்தலாமே என்ற யோசனையையும் தந்தது*


*💎உடைந்த வாட்டர் கேன்களைக் குறைந்த விலைக்கு வாங்கினேன். அதற்குத் தேவையான பிளாஸ்டிக் குழாய்களையும். அவற்றைப் பொருத்துவதற்கான செலவுகளைப் பகிர்ந்துகொள்ள என் நண்பர்கள் சிலர் முன்வந்தார்கள். சக ஆசிரியர்களும் மகிழ்ச்சியோடு உதவினர்**💎அதனால், விரைவாக இந்தப் பணியைச் செய்துமுடித்தோம். இதில் ஒரு சிறப்பான அம்சம் என்னவெனில், இந்தக் கழிவறையைப் பராமரிப்பது மிகவும் எளிது**💎நாங்கள் எடுக்கும் முயற்சிகளைப் பார்த்த மாணவர்களும் அதற்கு தகுந்த மதிப்பளிக்க வேண்டும் என நினைத்தனர்*


*💎இப்போது, ஒரு மாணவர்கூட திறந்தவெளியில் சிறுநீர் கழிப்பதில்லை. கழிவறையைப் பயன்படுத்துகின்றனர். அதனால், சிறுநீர் துர்நாற்றம் சுத்தமாக நின்றுவிட்டது. மாணவர்களின் ஆரோக்கியமும் காக்கப்பட்டுள்ளது*


*💎இப்படி ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயங்களையும் கவனித்து அதற்கான தீர்வுகளை எட்ட வேண்டும் என்பதே எங்களின் எண்ணம்" என்கிறார்**💎பணம் இல்லாததால் கல்வி கிடைக்கவில்லை என்று ஒருவர் சொல்லாத நிலையைத் தக்கவைத்திருப்பவை அரசுப் பள்ளிதாம்*


*🛡அதைச் சிறப்பாகக் கொண்டுசெல்லும் இவர் போன்ற ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தாராளமாகப் பகிர்ந்துகொள்வோம்*

2 comments:

  1. தங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.
    புகைப்படம் upload செய்தால் நன்று.

    ReplyDelete