www.asiriyar.net

Tuesday, 3 July 2018

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், எந்த தரவரிசைக்கு, எந்த கல்லுாரி கிடைக்கும் ??

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், எந்த தரவரிசைக்கு, எந்த கல்லுாரி கிடைக்கும் என்ற புதிய தகவலை, அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது.



   இதில், மூன்றாண்டு தரவரிசை எண்கள் இடம் பெற்றுள்ளன. அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில், முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு, தமிழக அரசின் சார்பில், இன்ஜி., கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, ஆன்லைன் வாயிலாக கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது.


கவுன்சிலிங்கில் பங்கேற்க, 1.04 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கான தரவரிசை பட்டியல், ஜூன், 28ல் வெளியானது. ஜூலை, 10க்கு பின், ஆன்லைன் கவுன்சிலிங் நடக்க உள்ளது. இந்நிலையில், தரவரிசையில் இடம் பெற்றுள்ள மாணவர்களுக்கு, எந்த கல்லுாரியை தேர்வு செய்யலாம் என்ற குழப்பத்தை போக்கும் வகையில், அண்ணா பல்கலையில் இருந்து, புதிய வழிகாட்டும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு இன்ஜி., மாணவர் சேர்க்கைக்கான, https://tnea.ac.in என்ற இணையதளத்தில், இந்த விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.ஒவ்வொரு கல்லுாரியிலும், ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும், எந்த தரவரிசை எண் வரையிலான மாணவர்களுக்கு, இட ஒதுக்கீடு கிடைத்தது.


  இன வாரியாக எவ்வளவு, 'கட் ஆப்' மதிப்பெண் தேவை, 2015 முதல், 2017 வரை, இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட, 'கட் ஆப்' மதிப்பெண் விபரங்கள், கல்லுாரி வாரியாக இணைக்கப்பட்டுள்ளன. இந்த அடிப்படை தகவல்களை மாணவர்கள் தெரிந்து கொண்டால், கல்லுாரிகளை எளிதில் தேர்வு செய்ய முடியும்.

No comments:

Post a Comment