www.asiriyar.net

Wednesday, 4 July 2018

ஆசிரியர் தகுதித் தேர்வு, டிஎன்பிஎஸ்சி குரூப் 2: பெரியார் ஐஏஎஸ் அகாதெமியில் இலவச பயிற்சி

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி முகாம் ஜூலை 8, 14 ஆகிய தேதிகளில் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் ஐஏஎஸ் அகாதெமியில் நடைபெறவுள்ளது.




  தொடக்கப் பள்ளி, இடைநிலைப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக, ஆசிரியர் தேர்வுவாரியம் சார்பில் வரும் அக்டோபர் மாதம் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடைபெறவுள்ளன. இதற்கான இலவசப் பயிற்சி முகாம், சென்னை வேப்பேரி ஈவிகே சம்பத் சாலையில் செயல்பட்டு வரும் பெரியார் ஐஏஎஸ் அகாதெமியில் ஜூலை 8-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2: தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர், நகராட்சி ஆணையர், சார் பதிவாளர், துணை வணிகவரி அலுவலர் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான 1,600-க்கும் மேற்பட்ட பணிகளுக்கு, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் பட்டப்படிப்பை அடிப்படையாகக் கொண்ட குரூப் 2 தேர்வினை நடத்தவுள்ளது. அதற்கான இலவசக் கருத்தரங்கம், பயிற்சி வகுப்பு ஜூலை 14 -ஆம் தேதி காலை 10 மணிக்கு இந்த அகாதெமியில் நடைபெறவுள்ளது.

இந்த இலவச கருத்தரங்கங்களில் அந்தந்தத் துறை சார்ந்தவல்லுநர்கள், பேராசிரியர்கள், தேர்வில் வெற்றி பெற்ற முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டு மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கவுள்ளனர். மேலும் தேர்வில் வெற்றி பெறுவதற்கான எளிய வழிமுறைகளை விவரிக்கவுள்ளனர்.

இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் 044-2661 8056, 99406 38537 ஆகிய தொலைபேசி எண்களிலும், பெரியார் ஐஏஎஸ் அகாதெமியில் நேரிலும் தொடர்பு கொள்ளலாம் என அந்த அகாதெமியின் ஒருங்கிணைப்பாளர் கா.அமுதரசன் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Tesla pushes the points of confinement of independent driving with their Full Self-Driving Capability in Tesla Model S. It utilizes 8 cameras and is fit for playing out every one of the obligations of a driver.

    ReplyDelete