தமிழக பட்ஜெட் 2018-19 : முக்கிய அம்சங்கள்:
* வேளாண் துறைக்கு ரூ.8,916 கோடி ஒதுக்கீடு
* மலை சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ75 கோடி
வரும் நிதியாண்டுக்கான (2018-19) நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று காலை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
முன்னதாக முதல்வர் பழனிசாமியும், நிதிநிலை அறிக்கையுடன் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் சட்டப்பேரவைக்குள் வந்துள்ளனர்.
பட்ஜெட் கூட்டத் தொடரை அவைத் தலைவர் தனபால் தொடங்கி வைத்து, பட்ஜெட்டை தாக்கல் செய்ய ஓ. பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் ஓ. பன்னீர்செல்வம்.
அறிக்கையில் புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேசமயம், ஏழாவது ஊதியக் குழு நடைமுறை, புதிய அரசுத் திட்டங்கள் ஆகியவற்றால் ஏற்பட்ட செலவினங்களைச் சமாளிக்க வருவாயைத் திரட்டுவதற்கான திட்டங்களும் முன்வைக்கப்படும் எனத் தெரிகிறது.
துறை வாரியான மானியக் கோரிக்கைகள்: அரசின் ஒவ்வொரு துறைகளுக்கும் தேவையான நிதியைக் கோர பேரவையின் ஒப்புதலைப் பெற வேண்டும். இதற்காக, தினந்தோறும் துறை வாரியான மானியக் கோரிக்கைகள் பேரவையில் சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.
இது ஒவ்வோர் ஆண்டும் சுமார் 20 முதல் 25 நாள்களுக்கு நடைபெறும். நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு பதிலுரை முடிக்கப்பட்ட பிறகு, துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெறுவது வழக்கம்.
ஆனால், இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு பேரவையில் நிறைவேற்றிய பிறகு, துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும், வாக்கெடுப்பும் ஏப்ரலில் நடைபெற வாய்ப்புகள் இருப்பதாக பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
பட்ஜெட் கூட்டத் தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு, பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.
No comments:
Post a Comment